வருசம் பிறந்தாச்சு!!!!

"வருசம் பிறந்து இன்னியோடு நாலு நாளாகிப் போச்சு. இன்னும் இந்த பயலுவெலே சங்கத்து பக்கம் காணோம், ஆளுக்கு ஆளு வருஷபிறப்புக்கு லீவு வேணுமின்னு போனாய்ங்க, ஆனா இன்னவரைக்கும் ஒருத்தனும் திரும்பி வரலை. புதுவருசம் அதுவுமா எதாவது செய்யவேணாமா சங்கத்திலே?? ஏலேய் எங்கடா போய் தொலைச்சீங்க அப்ரெண்டிஸ்களா???"

தல இவ்வாறு சங்கத்து குடிசைக்குள்ளே இருந்து சவுண்ட் விட்டுக்கிறோப்பா மெல்லமா பூனைமாதிரி ஒரு உருவம் உள்ளே நுழைகிறது.

"ஏலேய்! போர்வாள் என்னாச்சு ஒனக்கு? ஒரு நா'தான் லீவுன்னு சொல்லிட்டு இம்பூட்டு நாளு கழிச்சு வந்திருக்கே?"

"ஆமாம் இங்கே வந்து என்ன கிழிக்கப்போறேன், ஒன்னைய வச்சு கச்சேரி நடத்தி கல்லா கட்டலாமின்னு பார்த்து ஒன்னே விக்கிபசங்ககிட்டே டீயூசனெல்லாம் அனுப்பிவைச்சா ஆனா நீ இன்னும் கடைசிபெஞ்சு மாப்பிள்ளை கணக்கா ஒன்னுமே தெரியமே இருக்கிற??"

"ஏலேய் நீங்கெல்லாம் என்னையே வச்சு காமெடி பண்ணுறது பத்தலே'ன்னு அதே வேறே கத்துகனுமின்னு வேறே சொல்லிக்கிட்டு திரியீறீங்க! கச்சேரியும் சீக்கிரத்திலே பண்ணிப்பிடுவோம்! இன்னும் சங்கத்து சிங்கங்களை எங்கேய்யா???"

"இந்தா வந்துட்டோம்" ன்னு சங்கத்து சிங்கங்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைகின்றனர்.

"தள! எங்கே போயிட்டிங்க... ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடுது'ன்னு கவிஜ எழுதலாமின்னு பார்த்தா முன்னாடி யாரோ ஒருத்தர் இதே வரிகளை எழுதிப்பிட்டாராம்!"

"எதுக்கு தல? என்னை தேடினே??? என்ன பிரச்சினை உனக்கு??"

"நீங்க எல்லாருமே எனக்கு பிரச்சினைதான்! இதிலே வேறே எங்கேயிருந்து வரப்போகுது இனிமே பிரச்சினையெல்லாம்???"

"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

"ஏலே புலி எதுக்கு இம்புட்டு சூடா ஆகிறே??? இரை பலமோ?"

"தல நீப்பாட்டுக்கு பேசிட்டே போறே?? ஒனக்கு என்னா எங்களாலே பிரச்சினை?"

"இங்கே ஒருத்தன் என்னை வச்சு காமெடி பண்ணினது பத்தாதுன்னு கச்சேரி வைச்சே ஆகணுமின்னு அலையிறான், இன்னோருத்தன் அதுக்கு போட்டுக்கிறே டிரெஸின்னு ஊர்உலகத்திலே திரிஞ்சுக்கிட்டு இருக்கிற நொண்டி மாட்டுக்கிட்டே முட்டி வாங்குமின்னு அலையிறான்? இன்னும் எத்தனை உதாரணம் வேணும் கட்டரு ஒனக்கு??"

"தல அப்பிடியெல்லாம் பேசாதே ஒனக்காக என்னோட டிராக்டெரயெல்லாம் ஓசியா தாரென்னு சொன்னேலே?? அப்புறமா என்னா வேணும்?" இது விவசாயி

"ஏலேய் விடுங்கய்யா? சும்மா ஒரே பேச்சே பேசிக்கிட்டு??? மாசம் பிறந்துருச்சு, பயப்புள்ளக நீங்க ஒன்னும் பண்ணுறேமாதிரி காணோம்? என்னாலே உங்க ஐடியா???"

"இன்னும் சங்கம் பீட்டா, பாட்டா, தோட்டா'ன்னு இழுத்துக்கிட்டு தான் இருக்கு? நீ கேட்டா அதெல்லாம் சொல்லாமின்னு இருந்தோம்! ஆனா நீயே கேட்டுட்டே?"

"அதெல்லாம் சரித்தான் போ.வா, என்ன அடுத்தகட்ட நடவடிக்கை அதே பேசுங்க மொதல்லே?? புத்தம்புதுசு, பொலிவு, மலிவுன்னு என்னோமே அறிவிப்பு விட்டு அதே வழக்கம்போலே புஸ்வாணமா ஆக்கிறாதீங்கலே சாமிகளா!"

"இல்லே தல! ஒனக்கு நாங்க எப்பிடியெல்லாம் ஆப்பு வைச்சோமின்னு விலா'வாரியா விளக்கமா சொல்லுறது அதுதான்! அதுனாலே அதே திரும்ப கொண்டுவந்து நம்மோளோட வீரவரலாற்றை நிருபிக்கிறதுதான் ஒன்னை பின்பற்றி வர்ற எங்களை மாதிரி சிங்கங்களுக்கு அழகு!"

"அப்பிடி சொல்லு! அதேயும் தெளிவா சொல்லு போ.வா. நீ பேசினே வாக்கை நிறைவேற்றுவே'ன்னு நம்பிக்கை இருக்கு! இந்தமாச அ.வா'வே வரவேற்று செலவு பண்ணோமின்னு எம்புட்டு ஆட்டையே போட்டிங்க அப்ரெண்டிஸ்களா???"

"தல மைண்ட் யூவர் வேர்ட்"

"ஏலேய் ராயலு? இருக்கிறது தமிழ்நாட்டிலே ஆனா சவுண்ட்விடறது இங்கிலிபிஸிலே வேறேயா"?

"அதுக்கு காரணம் நான் சொல்லுறேன் தல!"

"அப்ரெண்டிஸ்'கிட்டே அப்பிடி என்ன தீடீர் மாற்றமின்னு சொல்லு பாண்டி!"

"நான் பிகர்வலம் போறேப்போ நம்மை ராயல் தம்பியேயும் கைத்தாங்கலா கூட்டிட்டு போனேன். நான் பார்க்கிற பட்சிகளிலே கொஞ்சகாணுதான் பார்த்தாப்பலே! ஆனா அதிலிருந்து ஒரே பீட்டர் மயம்தான், இப்போதானே வந்திருக்காரு! அதுதான் இப்பிடி ரீயாசக்சன் கொடுக்கிறார்ப்பலே"

"அது சரி! நீ கோடிக்கணக்கிலே பார்த்தாலும் ஒரேமாதிரி ஜொள்ளு விடுவே! ஒன்னைமாதிரியெல்லாம் ஜொள்ளிலே ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்க யாரால்லும் முடியாது! ஆனா ஒன்கூட வந்ததுக்கே இந்தபயலுக்கு இம்பூட்டா? சரி இம்மாசத்து அ.வா வரவேறப்பு வரவு-செலவு என்னாலே ஆச்சு?"

"ஐயோ தல அவரு ஒன்னாருவா குடுத்து பஸ்ஸிலே போயிருறாரு, இல்லேன்னா ஒட்டை சைக்கிளே எடுத்துக்கிட்டு போயிறாரு! நம்மளை மாதிரி ரிச்சா இல்லை"

"ராயலு என்னாலே சொல்லுறே?? அவருக்கிட்டே சொல்லிட்டீங்களா?? அட்லாஸின்னா என்னான்னு??"

"இல்லேமேயா அவரும் ரெடியா'தான் இருக்காரு! படு லோக்கலா அதுவும் கலக்கலா ஆப்பு வைக்க? ஹி ஹி நாங்கதான் இந்தப் பக்கம் வரலை! ஆனா எங்க எல்லாருக்கும் முன்னாடி வந்துக்கிட்டு சவுண்ட் விட்டுக்கிட்டு இருக்கிறே?"

"வெயிட் பண்ணு! வெகுச் சீக்கிரத்திலே ஒன்னையே மீட் பண்ணுறோம்!!" வந்த வரிசையிலே எல்லா சங்கத்து சிங்கங்கள் வரிசையாக வெளியே செல்கின்றனர்.

"டேய் டேய்'ன்னு 7.1 ஸ்டீரியோ எப்க்ட்'லே தல கதறுகிறார்.

தல கைப்புள்ள'யை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சந்திக்க சங்கத்துக்குள் நுழைக்கிறார் இம்மாதத்து அட்லாஸ் வாலிபர் லக்கிலுக்........

(தொடரும்)

8 comments:

கப்பி | Kappi said...

:))

தல எப்பய்யா பாடப் போறாரு?

கதிர் said...

சங்கத்து கொட்டாயி காத்து வாங்குதேன்னு சொன்னேன். புயலே அடிக்க வெச்சிட்டாரு ராயலு.

எங்கருந்துப்பா யோசிக்கறிங்க? அதுசரி தலய நோண்டறதுக்கு சொல்லித்தரணுமா என்ன! அதான் கொழந்தைக்கு கூட தெரியுமே!

கதிர் said...

//தல எப்பய்யா பாடப் போறாரு?//

ஏய்யா உனக்கு இந்த கொலவெறி?

அவருதான் சொல்லியிருக்காருல்ல
எட்டணா இருந்தாதான் அவரு பாட்டு எட்டு ஊருக்காச்சும் கேக்குமாம். இதுலருந்தே தெரியல தலய பத்தி
சல்லிக்காசு கூட குடுக்காம சங்கீதம் கத்துக்க போனா சங்கீதா கூட திரும்பி பாக்க மாட்டா!

Anonymous said...

//:))

தல எப்பய்யா பாடப் போறாரு? //

வாய்யா கப்பிநிலவா....

வெகு சீக்கிரமே தல கச்சேரியிலெயும் கலக்குவாரு...

Anonymous said...

//சங்கத்து கொட்டாயி காத்து வாங்குதேன்னு சொன்னேன். புயலே அடிக்க வெச்சிட்டாரு ராயலு.//

கதிரு,

காத்து வாங்கினதுக்கு காரணம்தான் பீட்டா'ன்னு சொன்னோமில்லே.. ஆனா ரொம்பவும் காத்து வாங்கிறகூடாதின்னு தான் கொஞ்சகாணு பீதியே கிளம்பியாச்சு..... :-)))

//எங்கருந்துப்பா யோசிக்கறிங்க? அதுசரி தலய நோண்டறதுக்கு சொல்லித்தரணுமா என்ன! அதான் கொழந்தைக்கு கூட தெரியுமே! //

ஹி ஹி

Anonymous said...

//ஏலேய் நீங்கெல்லாம் என்னையே வச்சு காமெடி பண்ணுறது பத்தலே'ன்னு அதே வேறே கத்துகனுமின்னு வேறே சொல்லிக்கிட்டு திரியீறீங்க! கச்சேரியும் சீக்கிரத்திலே பண்ணிப்பிடுவோம்!//

இப்பிடியே புலி வருது, புலி வருது ஏமாத்தின கதை மாதிரி இதுவும் ஏமாத்து வேலைதானா?

Anonymous said...

//அவருதான் சொல்லியிருக்காருல்ல
எட்டணா இருந்தாதான் அவரு பாட்டு எட்டு ஊருக்காச்சும் கேக்குமாம். இதுலருந்தே தெரியல தலய பத்தி
சல்லிக்காசு கூட குடுக்காம சங்கீதம் கத்துக்க போனா சங்கீதா கூட திரும்பி பாக்க மாட்டா! //

வேணாம் கதிரு தல'யே சீண்டி பார்க்கதே. அவரு இப்போ சங்கீத கச்சேரி வச்சே ஆகனுமின்னு பயங்கரமா வீட்டுப்பாடமெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்காரு.

அப்புறம் என்ன சங்கீதா, அப்பிடின்னு சொல்லுறே?? தல கதை ஒனக்கும் தெரிஞ்சுப் போச்சா??

யாருக்கிட்டேயும் சொல்லிறாதேப்பா!!!

:-)

Anonymous said...

அனானி,

புலி ஏற்கெனவே இந்தியா வந்திருச்சு எல்லார் உசுரையும் வாங்கிறதுக்கு.... :-(((

அப்புறம் பேர் போட்டு கருத்து சொன்னவங்களிலே இருந்து உங்களை மாதிரி பெயர் போடாதவங்க வரைக்கும் அனைவரும் விரும்பும் தல கச்சேரி விரைவில் அரங்கேறும் என அறுதியிட்டு உறுதிக் கூறுகிறேன்.