சிங்கங்களுக்கு தல கைப்பு கடிதம்

கொஞ்ச நாளாச் சங்கத்தில் இருந்து எந்த அறிக்கையும் வராத காரணத்தால் கடுப்புக்களைக் கிளறிய படி அகமதா பாளையம் முக்கு சந்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்த கைப்பு சங்கத்தின் அலுவலகத்துக்குப் பத்து நாள் முன்னாடி அனுப்பிய பேக்ஸ்...பீட்டா பிளாக் மேட்டரைக் காரணம் காட்டி சங்கத்து பயல்கள் எல்லாரும் சொல்லாமக் கொள்ளமா அங்கிட்டும் இங்கிட்டும் புறப்பட்டு பொழ்ப்பைப் பாக்கப் போயிட்டதால இந்தா இப்போத் தான் நான், ஓங்க கில்லி பையன் பாக்குறேன்...

அதாவது வர்ற பிப்ரவரி 14 ஊருக்கே உவகைத் தரும் லவ்வர்ஸ் டே... அந்த நாள் தான் நம்ம கைப்பு வாழ்க்கையிலும் ஒரு மகத்தான் நாள்...

அந்த மகத்தான நாளை ஒவ்வொரு வருத்தப் படாத வாலிபனும் சிறப்பாக் கொண்டாடணும்ன்னு கேட்டுகிட்டு அவரே ஒரு கடிதம் எழுதியிருக்கார்...

தலச் சிங்கங்களுக்கு சவுண்டு கொடுத்து எழுதியிருக்கும் கடிதம், இந்தாக் கீழே சங்கப் பலகையிலே ஓட்டியாச்சுப் பாருங்க..

என்னைய மாதிரியே பொழப்பு அத்து, நாட்டுல்ல வீட்டுல்ல பொட்டித் தட்டுறேன்னு சொல்லிகிட்டு ஆபிஸ்ல்ல சம்பளம், கூட போனஸ், இன்னும் இதர அலவுன்ஸ் அம்புட்டையும் வாங்கிட்டு வேலை நேரத்துல்ல வெத்துத் தனமா பதிவு போட்டுகிட்டும் பதிவைப் படிச்சுகிட்டும்...பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுகிட்டும் திரியற அம்புட்டு மக்களுக்கும் இந்த கைப்புள்ளயின் குட் மார்னிங்...

கொஞ்ச நாளாப் சங்கம் பக்கம் வர முடியல்ல... இங்கிட்டு இருந்தே பாளையத்துல்ல பொழ்ப்பைப் பாத்துகிட்டே அங்கே நடக்குறதே பாக்கலாம்ன்னு மலேசியாவுல்ல ஒரு சந்தையிலே ஆட்டயப் போட்டு, சங்கத்து ஆபிஸ்ல்ல மாட்டி வச்சிருந்த சி.சி.டிவியை எந்த களவாணிப் பயலோ கமுக்கமாக் களவாண்டுட்டுப் போயிருக்கான்...

சரி ஒத்த போன் போட்டு விவரம் கேக்கலாம்ன்னு நினைச்சா... போன் கனெக்ஷனைப் புடுங்கி ஒரு பைய இடுப்பு அரைஞாண் கயிறாக் கட்டிட்டு ஊர் ஓரமாத் திரியறானான்... (இருடீ வந்து உனக்கு தனிக் கச்சேரி வைக்கிறேன்)..

அஞ்சு வயசு சின்னப் புள்ளல்ல இருந்து அறுபது பொக்கவா கிழ்வி வரைக்கும் பாத்துக் காறி துப்பன்னாலும் கொஞ்சம் கூடக் கலங்கமா பொறுக்கி சேர்த்த செங்கல் வச்சே கட்டுனச் சங்க கட்டடம்.. சிங்கமெல்லாம் சீறி சிலுப்பிகிட்டு திரிஞ்ச வரலாற்று வளாகத்துக்கு இப்போ கரண்ட் கனெக்ஷன் ஈவு இரக்கம் இல்லாம கட் பண்ணிட்டாங்களாம்..

ஆனாலும் நாங்க எல்லாம் யாரு?
வருத்தம்ன்னா என்னன்னுனே தெரியாத திமிங்கலக் கோஷ்ட்டி இல்ல...
கரண்ட் போனா என்ன??
சூரியனையே அட்லாஸ் வாலிபனா இறக்கி சங்கத்துக்கு லைட் போட்டுட்டோம் இல்ல....

கொஞ்சம் ஓவராப் பேசுறேனோ... சரி... வீரன் வாய்ன்னா பேசும் போது நாலு வீர வார்த்தைப் அப்படி இப்படி சிதறத் தானேச் செய்யும்....
வீரன் கையின்னா கீ போர்ட்ல்ல வீரம் விழைஞ்சு வானத்தை நோக்கி நெட்டி முறிக்கத் தானே செய்யும்....இதெல்லாம் கண்டுக்கப் பிடாது.... வீரன் வாழ்க்கையிலே ஜகஜம்...

அய்யோ அய்யோ நான் சொல்ல வந்த மேட்டர் என்னன்னு சொல்லவே இல்ல... கையிலே கரண்ட் பாஞ்ச மாதிரி அப்படியே வார்த்தையாக் கொட்டுதா கன்ட்ரோல் பண்ண முடியல்ல....

அதாவது.. ஆண்டிப்பட்டிங்கற ஊருல்ல அஞ்சாத அலங்கநல்லூர் மொரட்டுக் காளையாக் கலக்கிட்டு திரிஞ்ச இந்த கைப்புள்ளயின் வாழ்க்கையில் ஒரு மகத்தான திருப்பம் நடந்துச்சு...

ஆமாய்யா.. பிப்ரவரி 14.... அது வரைக்கும் எல்லாரையும் மாதிரி அடி உதைன்னா ஆறு மைலுக்கு அப்பால ஒடுற ஒரு சாதரண சல்லிப் பயலாத் தான் இந்த கைப்புள்ளயும் இருந்தான்...ஏன் பக்கத்து சீட் மொட்ட முருகேசன் கிள்ளுனாலே போதும் ரோசா மாதிரி அழுது அழுது முகம் சிவந்துப் போயிருவான் இந்த கைப்பு.. அப்படி இருந்த கைப்புள்ள இன்னிக்கு இடி இடிச்சாக் கூட திரும்பி பார்த்து லைட்டா ஸ்மைல் விடுற அளவுக்கு மாறியிருக்கேனா... அதுக்குக் காரணம் அந்த பிப்ரவரி 14....

அந்தப் பிப்ரவரி 14 என்ன நடந்துச்சுன்னா.......

பொங்கி வர்ற இளமையோட...வாலிப வயசு திமிர.. நெஞ்சு நிமிர ... உள்ளூர் அழகில்ல இருந்து மதுர மீனாட்சி கோயிலைச் சுத்திப் பாக்க வர்ற வெள்ளைக்கார அழகி வரைக்கும் எல்லாப் பொம்பளைப் புள்ளக மேலயும் கைப்புள்ள கண்ட படி காதல் வசப் பட்டுக் கொண்டிருந்த அது ஒரு கனாக் காலம்...

எல்லாரையும் காதலிச்சுகிட்டு இருக்கானே.. ஆனா தன்னை யாருமே திரும்பிக் கூடப் பாக்கலீயேங்கற வருத்தம் தம் பையனுக்கு கொஞ்சம் கூட இல்லையேன்னு எங்கப்பா கையப்பருக்கு ஒரே வருத்தம்..

ஓடனே ஊர் பஞ்சாயத்துக் கூடிச்சு... இன்னியும் நம்மூர்ல்ல பொண்டு புள்ளக பத்திரமா இருக்கணும்ன்னா இவனுக்குக் கட்டாயம் கலியாணம் பண்ணி வைக்கணும்ன்னு முடிவாச்சு... எனக்கு கலியாணம்ன்னு சொன்னதும் ஊரே சந்தோசமாயிருச்சு.. பொண்ணப் பெத்தவங்கப் பூராப் பேரும் கோயிலுக்கு கிடா வெட்டு...108 சிதறு தேங்கான்னு சிதற விட்டு சீட்டியடிச்சாங்க...கிழவிகக் கூட கம்பை ஊனிகிட்டு கோயிலுக்குப் போய கடவுளுக்கு டாங்க்ஸ் சொன்னாய்ங்கன்னாப் பாத்துக்கங்க...

இங்கேனத் தான் வினை தோகைய விரிச்சு ஆடுச்சு.. நம்ம யோக்கியதைக்கு உள்ளுர்ல்ல எந்த அப்பனும் தன் பொண்ணைத் தர மாட்டேன்னு சொல்லிட்டான்... அசலூர்ல்ல அந்தப் பக்கம் தேனி வரைக்கும் இந்தப் பக்கம் திருச்சி வரைக்கும் சான்சே இல்லன்னு ஆகிப் போச்சு...

கைப்புள்ள கலங்கவே இல்ல... அப்பாத் தான் பாவம் கவுந்துப் படுத்துக் கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டார்...இந்த சமயத்துல்ல தான் கொட்டாம்பட்டியிலே இருந்து ஒரு வரன் வந்துச்சு.. பாவம் யாரோ ஒரு ஒருத்தர் வாழ்க்கையிலே கொஞ்சம் பொழுதுபோக்கா வாழ்ந்து இருப்பார் போல எட்டும் பொண்ணாப் பொறந்துருச்சாம்.. நான் எவ்வளவு பெரிய முடிச்சவிக்கியா இருந்தாலும் பரவாயில்ல எனக்குப் பொண்ணுத் தர்றேன்னுச் சொல்லிட்டாராம்..

என்னோட இயற்கை அழகுக்கு இன்னும் அழ்குச் சேர்த்துக்கிட்டு என்னோட வாகனத்துல்ல நம்ம பயல்வ புடைச் சூழ பொண்ணுப் பாக்க கிளம்புனேன்...
அங்கே பலமாத் தான் வ்ரவேத்து காபி டிபன் எல்லாம் நல்லாவேக் கொடுத்தாயங்க... நானும் நம்ம சிங்கங்களும் நல்லாச் சாப்பிட்டோம்...

பொண்ணு பிடிச்சிருக்கான்னு எங்கப்பாக் கேட்டார்...

கைப்புள்ள மனசுல்ல காதல் பொங்கி வழிஞ்சு ஓட ஆரம்பிச்சுருச்சு...வெள்ளைக்காரன் ஸ்டைல்ல எழுந்துப் போய் பொண்ணைக் கட்டிப் பிடிச்சு ஒரு லிப் டூ லிப் கிஸ் அடிச்சு ஹே ஐ லவ் யூன்னு சொன்னேன்..

அவ்வளவு தான் ஒரு ஏழெட்டு எருமை மாடு எம் மேல குறுக்கும் நெடுக்கும்... குறுக்கும் நெடுக்குமா ஓடிக்கிட்டே இருக்க மாதிரி இருந்துச்சு... எனக்குப் பொண்ணு தர்றேன்னு சொன்னவன் என் வாயிலே மூணு குத்து....ஓடி, ஓடி வந்து குத்துனான்

ஒட்டு மொத்தமா லைட்டை எல்லாம் அணைச்ச மாதிரி ஒரே இருட்டு...முழிச்சுப் பாக்குறேன்.. ஜட்டி மட்டும் போட்டு கையைக் காலை எல்லாம் கட்டி வச்சு சின்னப் பிள்ளைய எல்லாம் விட்டு அடிக்க விட்டாயங்க,....

டேய்.. என்னடா இது.. கட்டிக்கப் போற புள்ளக்கு உம்மா கொடுத்தாத் தப்பாடா..ஏன்டா இப்படி கொலைவெறியில்ல பிச்சுப் புடுங்குறீங்கன்னு கேட்டேப்புட்டேன்...

"டேய் வெக்கங்கெட்ட வென்று.. நீ முத்தம் கொடுத்தது பொண்ணுக்கு இல்லடா என் பொண்டாட்டிக்குடான்னு " எனக்கு மாமனார் ஆகியிருக்க வேண்டியவர் கத்திகிட்டே குறி பார்த்து ஒரு கல்லை வச்சு என் வாயிலேயே அடிச்சான்...

"என்னது உங்க பொண்டாட்டியா.. உன் பொழுதுபோக்குக்கு இப்போத் தெரியுதுடா காரணம்" அப்படின்னு சொல்லும் போதே மறுபடியும் எனக்கு ப்யூஸ் போயிடுச்சு..

அதுக்குப் பொறவு கின்னஸ் அப்படின்னு ஒரு புக்ல்லருந்து என்னியப் பேட்டி எடுக்க வந்தாய்ங்க.. ஓலகத்தில்லேயே இந்த அளவுக்கு அடி,குத்து, மிதி ,உதைன்னு வாங்கி யாரும் கெத்தாத் திரும்ப நின்னது இல்லயாம்.. அடி..குத்து எல்லாம் சேத்து லட்சத்துல்ல கணக்குச் சொன்னாய்ங்க...

இது நடந்துக்குப் பிறகு எங்க ஊர் வாலிப மக்க எல்லாம் சேர்ந்து அந்த நாளை அதான் பிப்ரவரி 14ஐ பெரிய திருவிழாவாக் கொண்டாடா ஆரம்பிச்சாங்க... பட்டணத்துப் பக்கம் வேலன்ட்ன்ஸ் டேன்னு ஒரே வெளம்பரமாக் கொண்டாடுறாயங்க...

இந்த வருசம் பிப்ரவ்ரி 14 எல்லாரும் சங்கத்துக்கு வாங்க புதுசாப் பெயிண்ட் அடிச்ச பளபளன்னு அசத்தலாக் கொண்டாடிருவோம்....

இப்படிக்கு

தல கைப்புள்ள..
அகமதா பாளையம் ஜில்லா

தல கடிதம் இதோ சங்க போர்ட்ல்ல ஓட்டியாச்சு என் வேலை முடிஞ்சது.. நேரமாச்சு.. வர்றட்டானு சொல்லி எகிறுவது சல்லி பையனைச் சொல்லி அடிக்கும் கில்லி பையன்..

இப்போ இன்னா இன்றே நீ?

தமிழ் அருஞ்சொற்பொருள் விளக்கக் கையேடு

அல்வா - To cheat

ஆத்தா - Mother

அபேஸ் - Loot adiththal

அல்பம் - A silly/cheap dude

அண்ணாத்தே - The elder brother

அண்ணி - Anna's figure

அப்பீட்டு - Unsuccessful

அசத்தல் - Kalakkal

பஜாரி - A not-so-friendly figure

பந்தா - Pillim

பேக்கு - Fool

பாடி - Muscular Machi

சித்தீ - Aunty Figure

டப்ஸா/டூப் - Lie

தேசி குஜிலி - An Indian figure in US

தில் - Courage

தூள் - Super

தம் - To smoke

டாவு - Site seeing

டிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)

டமாரம் - Deaf

டோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl

ப்ரீயா வுடு மாமே - Forget it

காலி - Appeettu

குஜிலி - Figure

குரு/தல - Head of the gang

குஜால்ஸ் - Having fun with Gujilis

கானா - Rap song sung by Machis

கலீஜ் - Dirty

கில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude from

ஆந்திரா ஜக்கு - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)

ஜொள்ளு - Bird watching

ஜில்பான்ஸ் - Gujaals

ஜூட்டு - Escape when caught up by girlfriend's father.

ஜுஜிபி - Easy

ஜில் - An exclamation on seeing a Takkar figure

ஜல்சா - Same as Gujaals

காட்டான் - Uncivilized/ Rude Machi

கேணை - Idiot

கிக்கு / மப்பு -Intoxicated/under influence

கலக்கல்ஸ் - To cause a flutter

கேணை பக்கிரி - Friend of ushar pakri

கிண்டல் - To make Fun

காக்கா அடிக்கிறது - Putting soaps to someone

கே.எம்.எல். - Kedacha Mattum Labam

குட்டி - Figure

குடும்ப பிகர் - Homeloving Gujli

குடும்ப பாட்டு - A song with which machis identify themselves

குள்ளுஸ் - A short machi

லட்டு - Allva

லூட்டு -to steal

மாம்ஸ் - One cool dude

மாங்காய் - Fool

மச்சி - Maams

மண்டை - A sharp guy

மேரி - feminine of Peter

மாவு - refer O B.

நச்சுன்னு - Bull's eye

நம்பிட்டேன் - I don't believe you

நாட்டு கட்டை - A well-built village figure

நாட்டான் - Villager

நாமம் - To cheat

நைனா - Father (courtesy Telugu)

கடலை - Machi talking to a Gujili or vice versa

ஓபி - To waste time

ஒண்ணரை அணா - Worthless

பட்டாணி - Machi talking to Machi or Gujli talking to Gujli

பீட்டர் பார்ட்டி - Machi trying to show off by talking in

ஹை-பி - english

பத்தினி - A figure who goes around the block

பக்கிரி - A shrewd dude

பேட்டை - Area

பிசாத்து - Cheap

பிலிம் - Show-off

பீலா - To lie

ராம்போ - A manly figure

சிஸ்டர் - Often used by Machis while Approching Figures for the first time

சொங்கி - Lazy

சாந்து பொட்டு -Possibility of getting beaten by a stick (courtesy Movie:Thevar Magan)

டக்கர் பிகர் - Semma figure

தண்ணி - Liquor

தலைவர் - Leader

டின் கட்டறது - Getting into trouble (courtesy Movie: Anjali)

உஷார் பக்கிரி - Smart pakri

வெண்ணை - Fruit

வெயிட் பிகர் - A very attractive/rich figure

ராங்கு காட்டுறது -Acting indifferently

செந்தழல் வீராச்சாமி!


ஒரு குட் நியூஸ்!

கிங்காங் படத்தை தமிழில் ரீமேக் பண்ணியிருக்காங்க!

பார்க்க மறந்துடாதீங்க!

அடுத்த மாசம் ரிலீஸ்....

என்ன படத்தோட பேருதான் மாறிடுச்சி...

சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்கும்
"வீராச்சாமி"

- இப்பதிவு "வீராச்சாமி" திரைப்படக் காவியத்துக்கு விமர்சனம் எழுதிய செந்தழலாருக்கு சமர்ப்பணம்.

படம் உதவி : செந்தழலார் கொலைப்படை

மன்னா? என்னா?























மன்னா ஜோக்ஸ்

*******************

மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா.

புலவர் : அய்யகோ மன்னா... கி.கி.


சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே....

சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா.......

*******************

அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை....

மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே.....

*******************

மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது.

மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு.

*******************

அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னன் பெரும் 'படையோடு' வந்து கொண்டிருக்கிறான்....

மன்னர் : அமைச்சரே, கவுரவம் பார்க்காமல் நீங்களே போய் சொறிந்து விட்டு வந்து விடுங்கள்....

*******************

மன்னர்: எதிரி மன்னன் படையுடன் வருகிறானாமே? ஏற்பாடுகள் தயாரா?

மந்திரி: எல்லா வெள்ளைக் கொடிகளும் தயார்.


*******************

மன்னன்: மந்திரியரே... தளபதி எங்கே ?..

மந்திரி: பக்கத்து நாட்டில் தளபதி போஸ்டிங் காலியா இருக்குன்னு... இண்ட்ர்வியு போயிருக்காரு....

*******************

மன்னர்: யாரங்கே?

சிப்பாய்: பேர் கூட தெரியாத நீயெல்லாம் ஒரு ராஜா.

*******************

மன்னர் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

மந்திரி: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ýட்டான்.

மன்னர்: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

மந்திரி: அதைத்தான் சொல்லிட்டான்...!

*******************

அமைச்சர் : மன்னரே புறா மூலம் கடிதம் எழுதிய பக்கத்து நாட்டு மன்னனுக்கு என்னவென்று Acknowledgement அனுப்புவது?

மன்னர் : புறாக்கறி சூப்பர் என்று அனுப்பு.....

*******************

அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?

மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?

அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்....


:-)))))))))))))))))))))))))))))

குரு – திரை விமர்சனம்



மவுனராகம், அக்னிநட்சத்திரம், இதயத்தைத் திருடாதே படங்களில் மணிரத்னத்துக்கு இருந்த அதே இளமை பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் மணிரத்னத்துக்கு இன்னமும் இருக்கிறது. குரு படம் ஒரு தொழிலதிபரின் வெற்றியை பறைசாற்றும் படம் என்றாலும் படம் முழுக்க இளமை தெளித்துவிடப்பட்டிருக்கிறது.

துருக்கியில் பணியாற்றும் கதாநாயகன் பெல்லி டான்ஸர்களுடன் ஆட்டம் போடுவதில் ஆகட்டும். கிராமத்து அழகுப் புயல் ஐஸ்வர்யா ராய் அருவியில் ஆட்டம் போடுவதில் ஆகட்டும் இளமை… இளமை… எங்கும் இளமை…..

மும்பையில் புதுமனைவியோடு அபிஷேக் நடத்தும் குடித்தனம் இளமைச் சுனாமி. தினமும் காலையில் வேலைக்குச் செல்பவர் வீட்டை விட்டு இறங்கியவுடன் (வேண்டுமென்றே) பர்ஸை மறந்து வைத்து விட்டு, திரும்பவும் வீட்டுக்கு வந்து Noon Show காட்டுகிறார். இந்த மாதிரி தினமும் காலையில் வேலைக்குச் செல்லும்போது பர்ஸையோ, பைக் கீயையோ அல்லது கர்ச்சீப்பையையோ மறந்து விட்டுச் செல்லும் ஒரு நபரை எனக்கு ரொம்ப நெருக்கமாகவே தெரியும் 

படம் முழுக்க ஐஸ்வர்யா ராயை கொஞ்சிக்கொண்டே இருக்கிறார் குரு. கொஞ்சும்போது கூட அவரது தொழில் புத்தி மாறுவதில்லை. துணி வியாபாரம் செய்யும் குரு தன் மனைவியை “சீமை சில்க் மாதிரி இருக்கேடி” என்று தான் கொஞ்சுகிறார். உலக அழகி மனைவியாக வந்தால் யாருமே இதுபோல கொஞ்சிக் கொண்டு தான் இருப்பார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு நாளாக நாளாக இடை மெலிந்து கொடியை விட ஒல்லியாகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதே 50 கிலோ தான் என்று வைரமுத்து சொல்கிறார்.

பத்திரிகையாளராக வரும் மாதவனுக்கு காதலி வித்யாபாலன். படத்தின் வசனங்களும் ரொம்ப இளமை. வித்யா பாலன் பேசும் “மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா….” வசனம் சூப்பர். மாதவன் தன் காதலை வித்யாபாலனிடம் தெரிவித்து விட்டு அடிக்கிறார் பாருங்கள் ஒரு பிரெஞ்சு கிஸ்….. யப்பா….. செம சூடு…. ஆங்கிலப் படங்களில் கூட இவ்வளவு சூடான கிஸ்ஸைக் கண்டிருப்போமா என்பது சந்தேகமே…. கமல்ஹாசனுக்கு அடுத்த வாரிசு ரெடி.

குருபாய் பெரிய தொழிலதிபர் ஆனதும் தான் சிறுவயதில் மனைவியோடு குடும்பம் நடத்திய வீட்டுக்கு வந்தபின்பு வரும் ஒரு சில பிளாஷ்பேக் கிளிப்புகள் அருமை. மச்சினனின் தொல்லை தாங்காமல் மனைவியோடு ரகசியமாக குரு சரஸமாடும் காட்சிகளில் பின்னணி இசை, கேமிரா, வசனங்கள் என்று செம கூட்டணி.

பிகரோடு ஜாலியாகப் பார்க்க ஏற்றப் படம் குரு.

இப்படத்தின் வேறு கோணத்து விமர்சனத்தை இங்கே பாருங்கள்.

பெண்களோ, பெண்கள்!

பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு.

பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம். நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன் நண்பர்களுடன் சியர்ஸ் சொல்லி பொங்கல் கொண்டாடுகிறோம்.

போகி அன்றும் எங்களது “திருவிளையாடல்” தொடரும். பஞ்சர் சிவா கடையில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய பழைய சைக்கிள் டயர்களுடன் போகி கொண்டாடுவது எங்கள் வழக்கம். அட்வென்ச்சரில் ஆர்வம் கொண்ட சில வாலிபர்கள் அந்த டயரின் ஒரு புறத்தை கொளுத்தி விட்டு அப்படியே ஒரு குச்சியால் எரிந்த டயரை ஓட்டிக் கொண்டு தெருவை வலம் வருவது வழக்கம். கோலம் போடும் பிகர்களின் கவனத்தைக் கவர இதுமாதிரியான அட்வென்ச்சர்ஸ் அவசியம். சில ஆண்டுகளாக காவல்துறையினர் இந்த விளையாட்டுக்குத் தடை போட்டு எங்களது வாலிப வேகத்தை தடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

போகி அன்று “மோளம்” அடித்துக் கொண்டே தெருவை வலம்வரும்போது நாம் வெட்டும் பிகரின் வீட்டின் எதிரில் நின்று “போகி போச்சி, பொங்கலும் போச்சி, பொண்ணு தாடா மாமோய்” என்று கோரஸாக கூச்சலிட்டு வருங்கால மாமனாரை கலாய்ப்பதும் உண்டு.

ஏதோ கிராமத்து இளைஞர்களுக்கு மட்டுமே வீரம் உண்டு. ஜல்லிக்கட்டில் தினவெடுத்த தோள்களுடன் பயமில்லாமல் முட்டும் மாட்டை அடக்குகிறார்கள் என்ற மாயத்தோற்றம் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. பொங்கலுக்கு 15 நாள் முன்பே எங்களது “ஜல்லிக்கட்டு” ஆரம்பமாகிவிடுகிறது. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கே அசுரவேகத்தில், புல் மப்புடன் கொலைவெறியுடன் சொந்த பைக்கிலோ அல்லது ஓசி பைக்கிலோ பயணித்து எங்கேயாவது வீரத்துடன் முட்டிக் கொண்டு சாவது என்பதை எங்கள் பண்பாடாகவே வைத்திருக்கிறோம்.

இவ்வாறாக பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும் கொண்டாடும் நாங்கள் காணும்பொங்கலை மட்டும் விட்டுவிடுவோமா? மார்கழி மாதம் முழுவதுமே எங்களுக்கு காணும் பொங்கல் தான். அதிகாலை 4 மணிக்கே எழுந்து, கிடுகிடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்து, பட்டை அடித்து, அப்பா பாக்கெட்டிலிருந்து அம்பதோ, நூறோ லவட்டி தெருவலம் செல்வது வழக்கம். அப்போது தான் 5.30 மணிக்கு மார்கழிமாத கோலம் போட வரும் நைட்டி நந்தினியையும், மிடி மீனாட்சியையும் அதிகாலையிலேயே சந்திக்க முடியும். பிகர்களை மேக்கப் இல்லாமல் ஒரிஜினல் பர்சனாலிட்டியில் மீட் செய்ய முடிவது இந்த காணும் பொங்கலில் மட்டுமே சாத்தியம்.

அதற்குப் பின்பாக குளிருக்கு இதமாக ஒரு கிங்ஸ் வாங்கி 4 பேர் ஷேர் செய்துக் கொண்டு பயபக்தியுடன் அருகிலிருக்கும் ஏதாவது கோயிலுக்குச் சென்றால் சில வயோதிகர்கள் ஏதோ மார்கழி பஜனை செய்து வெண்பொங்கலோ அல்லது சுண்டலோ தருவார்கள். மார்கழி மாதம் முழுவதுமே அப்பாவின் தண்டச்சோறு திட்டு இல்லாமல் கோயில்களில் எங்களுக்கு ராஜமரியாதையுடன் “டிபன்” தருகிறார்கள்.

காணும் பொங்கல் ஸ்பெஷலாக பிகர் வெட்ட அரசாங்கம் சிறப்பு அனுமதியாக சுற்றுலாப் பொருட்காட்சி நடத்துவதை சென்னையின் வாலிபச் சிங்கங்கள் நன்றியுடன் வருடாவருடம் நினைத்துப் பார்ப்போம். சுற்றுலாப் பொருட்காட்சி மட்டுமா? கடற்கரையில் காணும்பொங்கல் அன்று வங்காள விரிகுடாவில் அடிக்கும் அலை எங்களது ஜொள் அலையே. சித்தாள் பிகரிலிருந்து சாப்ட்வேர் பிகர் வரை ஒரே இடத்தில் காணவேண்டுமா? சென்னைக்கு ஜனவரி 17 அன்று வாருங்கள். கடற்கரையில் பிகர்களுக்கு பிலிம் காட்டுவதற்காக நீச்சல் தெரியாவிட்டாலும் கடலில் குதித்து வீரத்துடன் உயிர்த்தியாகம் செய்யும் வாலிபர்களை சென்னையில் மட்டுமே காணுவது சாத்தியம்.

பிகர் கிடைக்காமல் அவதிப்படும் வாலிபர்களுக்கு வரப்பிரசாதம் இந்த காணும் பொங்கலே. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கோ அல்லது கிண்டி சிறுவர் பூங்காவுக்கோ சென்றால் அவரவர் பர்சனாலிட்டிக்கேற்ப தக்க எக்ஸ்போர்ட் பிகரையும் (எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் பிகர்) கரெக்டு செய்ய முடியும். ஏற்கனவே பிகரை ரைட்டு செய்து வைத்திருக்கும் புண்ணியவான்களும் பிகர்களோடு கோவளம், மகாபலிபுரம் என்று ரவுண்டு கட்டி கொண்டாடும் வழக்கமும் உண்டு.

பொங்கலுக்கு அடுத்து விரைவில் வரும் காதலர் தினத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய பொங்கல் விடுமுறை சென்னை இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சரி, சங்கத்து சிங்கங்களெல்லாம் பொங்கல் கொண்டாடுவோம். எங்கே கோஷம் போடுங்கள் பார்ப்போம்....

"பெண்களோ பெண்கள்"

ஜுனியர் ஃபார்மருக்கு வாழ்த்துகள்

இன்று(12.01.2007) தன்னுடைய முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் சங்கத்தின் இளைய சிங்கம் ஜுனியர் விவசாயி மாஸ்டர்.ஷெர்வின், எல்லா வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.


எங்களோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்த வாருங்கள்.

டோண்டு சார் கோச்சுக்க மாட்டேளே?




வலையுலக சச்சின் டோண்டுல்கர் (4800161)

தமிழ் வலையுலகில் பல காலமாக அடித்து ஆடி அசத்தி வருபவர். பொதுவாகவே சிக்ஸர்களும், போர்களுமாக அடிக்கும் இவருக்கு வலையுலகில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. எதிர்பாராத நேரங்களில் டக்-அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றுவதும் உண்டு. சில நேரங்களில் போளி விற்கும் நபர் ஒருவர் இவருக்குப் பதிலாக இவருடைய வேடத்திலேயே இறங்கி பவுண்டரிகளாக "சேம் சைடு கோல்" முறையில் அடித்து விடுகிறார்.

எனவே இவர் ஒரிஜினல் தான் எனக் காட்டுவதற்காக ISO நிறுவனத்திடமிருந்து 4800161 என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறார். அடுத்த முறை இவரது ஆட்டத்தை ரசிக்கும் ரசிகர்கள் இவர் ஒரிஜினல் தானா என்று கண்டறிய இவரது சட்டையில் பொறிக்கப்பட்டிருக்கும் 4800161 என்ற எண்ணை அவரவர் வீட்டுப் பரணில் பிடித்த எலியினை முகரவைத்து சரிபார்த்துக் கொள்ளலாம்.

டோண்டுல்கருக்கு பிடித்த உணவு : உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் மசாலா போண்டா

பிடிக்காத உணவு : துபாய் சிம்ரன் ஆப்பக்கடையின் ஆப்பம் மற்றும் பாயா

பிடித்தப் பாட்டு : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

பிடிக்காதப் பாட்டு : கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு

பிடித்த நிறம் : கருப்பைத் தவிர எதுவாயினும்



பதிவுக்கு பின்குறிப்பு : :-))))))))))))))))))))) (பெரிய ஸ்மைலி போட்டுட்டேன்)

என் மனசாட்சி : மாப்பு லக்கி! பதிவு எழுத சரக்கு இல்லேன்னா இப்படியெல்லாமா ஜல்லி அடிக்கிறது?

கலைமகள் மாமியாருக்கு கண் கொடுத்த கதை!!!

"கலைமகள் மாமியாருக்கு கண் கொடுத்த கதை! !
[மயிலை மன்னார் சொன்னது!]

திருமகளுக்கு காலையிலிருந்து ஒரு புது பிரச்சினை!

என்ன செய்வதுன்னு தெரியாம கையால தடவிகிட்டே நடக்கறாங்க!

எப்பவும் இல்லாத இப்படி ஒரு சோதனை வந்திடுச்சேன்னு ஒரே குழப்பம்!

சாதாரணமா, படுக்கையை விட்டே எழுந்திருக்காத நாராயணன், இந்த மார்கழி மாசத்துல மட்டும், 'டாண்'னு 4 மணிக்கே எழுந்து வெந்நீர் ரெடியான்னு கேக்கறாரு!
எப்படியோ, அவருக்கு முன்னாலியே எழுந்திரிச்சு, வெந்நீர் அடுப்பை மூட்டி, தண்ணியை ரொப்பி, கொதிக்கவெச்சு, ஒரு மாதிரியா ஒப்பேத்திகிட்டு இருந்தாங்க நம்ம லக்ஷ்மி!

ஆமாங்க! மஹாலக்ஷ்மிக்கு இப்பல்லாம் கொஞ்சம் கண்பார்வை மங்கலா தெரிய வருது!

இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை, சரியாயிடும்னு இவங்க காலத்தைத் தள்ளிகிட்டே வந்திட்டாங்க இதுவரைக்கும்.

என்ன; இந்த ஒரு மாசம்தானே இவர் இந்த ஆட்டம் ஆடுவாரு! அதுக்கப்புறம் பாம்பு படுக்கைல படுத்தார்னா, ஆழ்துயில்தானேன்னு இவங்களும் சமாளிச்சுகிட்டு வராங்க!

ஆனா, நெலமை கொஞ்சம் அதிகமாவே ஆயிட்டுது, இப்ப!

பாத்திரத்தை தள்ளி விடறதும், கட்டில்ல இடிச்சுகிட்டு பாலைக் கீழே கொட்டறதுமா அடிக்கடி ஆக ஆரம்பிச்சிடுச்சு!

நாராயணனே இதைப் பார்த்துட்டு, கொஞ்சம் கோவப்படவும், திட்டவும் ஆரம்பிச்சிட்டாரு!
"இப்பிடியே நிலைமை நீடிச்சிதுன்னா, ஒனக்கு இனிமே இங்க இடமில்லை! வூட்டுக்குப் போவ வேண்டியதுதான்"னு கண்டிஷனா சொல்லிட்டரு.
இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத லக்ஷ்மிக்கு கண்ணுல இருந்து "பொல பொல"ன்னு கண்ணீர் வுட ஆரம்பிச்சுட்டாங்க!

ஆர்கிட்ட போயி இதைச் சொல்லி அழறதுன்னும் தெரியலை!
என்ன வழின்னும் புரியலை!

வழக்கம் போல எல்லாருக்கும் முன்னால எழுந்திரிச்சு, ஊருக்கே வெளிச்சம் காட்டற சூரியன், அன்னிக்கும் அப்பிடியே லக்ஷ்மியம்மா வூட்டை எட்டிப் பார்த்தான்!
லக்ஷ்மியோ கண்ணைக் கசக்கிகிட்டு ஒக்காந்திருக்காங்க!

சரி, வெந்நீர் அடுப்புலதான் எதோ பிரச்சினை போல; பொகையினாலத்தான் அம்மா கண்ணீர் வுடறாங்கன்னு நினைச்சுகிட்டு, ரெண்டு வார்த்தை ஆறுதலா சொல்லலாம்னு உள்ளே நுழைஞ்சான் ரவி!

அவ்வளவுதான்! அப்பிடியே எல்லா விஷயத்தையும் போட்டுக் கொட்டிட்டாங்க ஸ்ரீதேவி!

அருணனுக்கா ஒரே வருத்தமா போயிரிச்சு!

நாம இதுக்கு எதனாச்சும் பண்ணனும்னு முடிவு பண்ணிகிட்டு, நேரா சுடுகாட்டு பக்கம் போறான்!

அங்கே நடு ராத்திரி ஆட்டத்தை எல்லாம் முடிச்சிட்டு, நம்ம வெட்டியான், அதாங்க சிவன், டயர்டா ஒக்காந்திருக்காரு.
அவர்கிட்ட போய் பலானது பலானது இதான்னு சூரியன் அல்லாத்தையும் சொல்றாரு!

சரி, நா இப்பவே போய் வெரிஃபை பண்றேன்ன்னு அவரும் சூலத்தைத் தூக்கிகிட்டு கிளம்பிட்டாரு.
போய் எல்லாத்தையும் வெசாரிச்சாரு!
மேட்டர் கரெக்டுதான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு, ஒடனே சூரியனைப் பார்த்து, "நீ போயி அல்லார்கிட்டயும் சமாச்சாரத்தை சொல்லி, இன்னா ஹெல்பு கிடைக்குமோ அத்த வாங்கியா? ஒடனே நாம லக்ஷ்மிக்கி கண்ணு கொடுத்தாவணும்"னு சொல்றாரு.

சரி, கண்ணுக்கு எங்க போவறது"ன்னு ரவி கேக்கறாரு.

"அத்தப் பத்தி ஒனக்கு இன்னா கவலை? அதுக்கெல்லாம் ஆளு ரெடியா இருக்கு! நீ போயி கொஞ்சம் துட்டு சேத்துகினு வா"ன்னு வெட்டியான் சொல்லிடறாரு!

அவ்ளோதான்! கதிரவன் தன் கிரணங்களை எல்லத் திசைக்குமா விரிக்கிறாரு! அவன் அவன், நா, நீன்னு போட்டி போட்டுகினு துட்டு அனுப்பறான்!
இவரு அல்லாத்தையும் கலெக்ட் பண்ணி, வெட்டியான் கையாண்டை கொடுக்கறாரு!

விஷயத்தைக் கேள்விப்பட்ட பாலாஜி, வெட்டித்தனமா இப்பிடி இருந்துட்டேனே! நான்ல மொதல்ல இத்த செஞ்சிருக்கணும்னு அவரு ஒரு ஏரியாவை எடுத்துக்கறாரு!

இன்னொரு பக்கம், "தங்கமா" கொட்டுது!

இப்பிடியே ரொம்ப சீக்கிரமா துட்டு சேர்ந்து போச்சு!

கடைசி நிமிஷத்துல நம்ம ராமர் ஓடியாராரு! "ராமாயணத்துல நான் பாலம் கட்டுபோது அணில் ஒண்ணு கடைசில வந்து ஹெல்ப் பண்ணின மாரி, இப்ப இதுக்கு நானும் கொஞ்சம் துட்டு தரேன்! அத்தையும் சேர்த்துக்கோங்க"ன்னு கெஞ்சறாரு! சரின்னு அத்தயும் வாங்கிப் போட்டுகினாரு ரவி!

மத்தியானம் ஆயிப் போச்சு! ரவி இப்ப செந்தழலா வீசறாரு!
"கண்ணு இருக்குனீங்களே; எங்கே இருக்கு?"ன்னு கோவமா கேக்கறாரு சிவனைப் பார்த்து!
"அவசரப்படாதே தம்பி! இந்த வேகம்தான வேணான்றேன்! வா என்னோட!"ன்னு நேரா அவரையும் இட்டுக்கினு கலைமகளாண்டை போறாரு!

"உன்கிட்ட படிப்பு இருக்கு! நீ வெவரம் தெரிஞ்சவ! இந்தா துட்டு! இத்த வெச்சுகிட்டு ஒன்னோட ஒரு கண்ணை நீ மஹாலக்ஷ்மிக்கு இப்பவே கொடுக்கணும்! மாமியாருக்கா என் கண்ணைக் கொடுக்கறதுன்னுல்லாம் யோசிக்கக்கூடாது!"னு ஸ்ட்ராங்கா சொல்றாரு!

"என் மாமியாருக்கு கொடுக்க எனக்கென்ன கசக்குமா? அதுலியும் துட்டு வேற தர்றீங்க! தாராளமா தர்றேன்!" சொல்லிடறாங்க!

அப்பால என்ன?

மகாலக்ஷ்மிக்கு கல்விக்கண்ணு கிடைச்சிடுது!
அல்லாரும் ரவியைப் பாராட்டறாங்க!

தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்லுவாங்க!
ஆனா, தை பொறக்கறதுக்கு முன்னாடியே, இப்படி ஒரு நல்ல காரியத்தை செஞ்ச அல்லாருக்கும் நான் நெறைய செல்வத்தைக் கொடுப்பேன்னு மகாலக்ஷ்மியும் வாக்கு கொடுக்கறாங்க!

கதையும் சுபமா முடிஞ்சிது!

இந்த பதிவினை அனுப்பிய SK அவர்களுக்கும், கல்விக்காக முயற்சி எடுத்த செந்தழல் ரவிக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்துப் பெருமக்களுக்கும் சங்கத்தின் ராயல் சல்யூட் !!!!!

ASL PLS? - Part 2

தோழர் விஜய் ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட். பார்க்கும் பிகர்களை எல்லாம் தன்னுடைய பிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி. நண்பர்களின் பிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவருக்குண்டு. முந்தையப் பதிவொன்றில் நான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய சகப்பணியாளர். வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் Aய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளர். அவருக்கு அப்போது 35 வயதிருக்கலாம். காதல் திருமணம் செய்து அதன் விளைவாக அழகான ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தார்.

என்னைப் போன்ற இளைஞர்கள் எப்போதும் "சாட், சாட்" என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட நண்பருக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு சாட்டிங்கில் மாட்டியவர்கள் நிறையப் பேர் அமெரிக்க பிகர்கள். வெள்ளைத் தோல் மீது பிறப்பிலேயே அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் கொஞ்ச நாள் சாட் செய்ததுமே நண்பர் கேட்கும் ஒரு கோரிக்கையை (அது ஒரு மோசமான ஆங்கில நாலெழுத்து கோரிக்கை) கண்டு காரித்துப்பி அனுப்பி விடுவார்கள் வெள்ளைக்கார பிகர்கள்.

இதனால் நண்பரின் பார்வை இந்தியப் பிகர்கள் மீது திரும்பியது. ஆனாலும் மாட்டணுமே?

ஒரு நாள் தோழர் விஜய் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டார். என்ன மேட்டர்? என்று வினவினேன். நண்பரை நாங்கள் மாமி என்று விளிப்பது வழக்கம். காரணம் பச்சைத் தெலுங்குக்காரரான அவர் எங்களையெல்லாம் "மாமே" என்று விளிப்பதற்குப் பதிலாக "மாமி" என்று விளிப்பார். அவருடைய தமிழ் Accent அவ்வளவு அருமையாக இருக்கும். கூர்க்கா மாதிரியான தோற்றம் கொண்ட அவர் பேசுவது சேட்டுக்கடை சேட்டு பேசுவது மாதிரியாக இருக்கும்.

"கிச்சா ஒரு பிகர் மாட்டிக்கிச்சி"

"இன்னா சொல்றே மாமீ. இந்த ஏஜுக்கு இதெல்லாம் ஓவரா தெரியலை"

"இன்னாடா ஒனக்கு மட்டும் மாட்டிக்கிட்டா ......................... இருப்பியா?" (.......... ஒரு மோசமான தமிழ் வார்த்தை. நாகரிகம் கருதி சென்ஸார் செய்திருக்கிறேன்)

"ஒன் இஷ்டம் மாமீ. ஆனாலும் ஒனக்கு கொழந்தை, குட்டின்னு இருக்கு. பாத்துக்கோ"

நம் ஆலோசனையை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை மாமி. ரொம்பவும் முத்திவிட்டிருந்தது. அவள் பெயர் நந்தினியாம். வயது பத்தொன்பதாம். சாட்டிங்கில் பசங்களை மடக்கும் பிகர்கள் எல்லோருக்குமே பத்தொன்பது வயதாக இருப்பது ஒரு ஆச்சரியகரமான Coincidence. சென்னையின் நுழைவாயிலில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாளாம்.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை" எனும் பழமொழிக்கேற்ப மாமி தினமும் 4 மணிநேரமாவது நந்தினியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டார். அவருக்கு கொஞ்சம் நஞ்சம் மீதியிருந்த வெள்ளைக்காரிகளை "அம்போ"வென விட்டார். என் மீது பரிதாபம் கொண்டு சில வெள்ளைக்காரிகளின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்து "நீ சாட்டிங் பண்ணிக்கோ" என்று பெருந்தன்மை காட்டினார்.

ஒரு நாள் அவள் நாங்கள் வேலை செய்த அலுவலகத்துக்கு கீழிருந்த நகைக்கடைக்கு வருவதாகச் சொன்னாள். நேரில் சந்திக்க விருப்பமா என்றும் கேட்டிருந்தாள். மாமி ரொம்பவும் பரபரப்பாகி விட்டார். அன்று அவருக்கு முக்கியமான வேலை இருந்தது. அவரது மனைவி கருவுற்றிருந்தார். கன்சல்டேஷனுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே நந்தினியைச் சந்திக்க இயலாத சூழ்நிலை. எனவே என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். "பச்சைத் தாவணியில் அவள் அக்காவுடன் வருவாள். எப்படி இருக்கிறாள் என்று மட்டும் பார்த்து வைத்துக் கொள். அவள் என்னவெல்லாம் செய்கிறாள் என்று நோட் செய்து வைத்துக் கொள். மறுநாள் சாட்டிங்கில் அவளை நானே மறைந்திருந்து பார்த்தது மாதிரி காட்டிக் கொள்கிறேன்" என்றார். நானும் பெரிய மனது வைத்து நண்பருக்காகச் சம்மதித்தேன்.

அன்றிரவு மாமியைக் கைப்பேசியில் அழைத்து நந்தினியின் உடல்வாகு, அவள் பேசும் ஸ்டைல், அவளது அக்கா குண்டாக இருந்தது. அவர்கள் வாங்கிய நகை போன்ற விவரங்களை கொடுத்தேன். நான் செய்த உதவிக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தழுதழுத்துச் சொன்னார் மாமி.

சில நாட்கள் சென்றது. மாமியின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. லேசாக முன்மண்டையில் விழுந்த வழுக்கையை மறைக்கும் விதத்தில் தலைவாரினார். சைடில் இருந்த நரைமுடியை மறைக்க "டை" அடிக்க ஆரம்பித்தார். டைட்டாக "டக்-இன்" செய்ய ஆரம்பித்தார். தொப்பை தெரியாதாம்.

ஒரு நாள் சாட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது "நாகேஸ்வரராவ் பார்க்கில் சந்திக்க விருப்பமா?" என்று நந்தினியிடம் கேட்டிருக்கிறார். "நந்தினியோ பார்க்குக்கு எல்லாம் வரமுடியாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெள்ளி மாலை 6 மணிக்கு வருகிறேன். சந்திக்கலாம்" என்று கூறியிருக்கிறாள். அந்தவார வெள்ளிக்காக மாமி தவம் இருக்க ஆரம்பித்தார்.

மாமி எதிர்பார்த்த அந்த வெள்ளியும் வந்தது. மாலை 5 மணிக்கே பரபரப்பாகி விட்டார் மாமி. "கிச்சா கொஞ்சம் பேர் அண்டு லவ்லியும், பவுடரும் கொடு" என்று என்னிடம் கேட்டார். என் பையில் இம்மீடியேட் பர்சனாலிட்டி அப்டேட்டுக்காக பர்மணெண்டாக பேர் அண்டு லவ்லியும், முகப்பவுடரும் வேறு சில இத்யாதிகளும் இருக்கும். அவருக்கு அவற்றைக் கொடுத்தேன். புல் மேக்கப்பில் மாமி கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.

சுமார் 2 மணிநேரம் கழித்து வந்தவர் கொஞ்சம் சோர்வாக காணப்பட்டார். "என்ன மாமி ஆச்சி?" என்றேன்.

"அவளைப் பார்த்தேன். ஆனாப் பேசலை"

"ஏன்?"

"என்னைப் பாத்ததுமே அவ வயசைத் தெரிஞ்சிக்கிட்டான்னா, அதுக்கப்புறம் என் கூட சாட் பண்ண மாட்டாளே? என்னாலே அதைத் தாங்கிக்க முடியாது"

"அவ எப்படியிருந்தா?"

"ரோஸ் கலர் சுடிதார் போட்டிருந்தா. அடிக்கடி என்னை சந்தேகமா ஓரக்கண்ணுல பாத்துக்கிட்டிருந்தா. ஆனா அவளுக்கு நான் தான் விஜய்னு தெரியாதில்லே. அதனாலே என் கூட அவப் பேசலை?"

இவ்வாறாக மாமியின் வாழ்க்கையில் தொடர்ந்து வசந்தம் வீசிக் கொண்டிருந்தது.

ஒருநாள் இரவு 8 மணிக்கு மாமி சாட்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்.

"ஹாய் நந்தினி. சினிமாவுக்கு போகலாமா?" - மாமி.

"போலாமே. சத்யம்ல டிக்கெட் புக் பண்ணிடுங்க டியர்." - என்று விடையளித்தேன் நந்தினி கிருஷ்ணாவாக மாமியுடன் ஒரு மாதக் காலமாக சாட்டிங் செய்துக் கொண்டிருந்த நான்.

ASL PLS?

நான் ஒரு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியில் ஜுனியர் லெவலில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த நேரம். எங்கள் CEOக்கு கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி. அவரது பர்சனல் மெயில்களையும் நான் தான் அப்போது Handle செய்துக் கொண்டிருந்தேன். அவர் தண்ணி அடிக்கும் கிளப், அலுமினி கிளப் மற்றும் அவரது மச்சான், மாமன் அனுப்பும் மெயில்களை எல்லாம் செக் செய்து அவருக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பதே அலுவலகத்தில் எனது முதல் வேலையாக இருந்தது.

ஒரு நாள் அவரிடம் வேலை கேட்டு ஒரு மெயில் வந்திருந்தது. அட்டாச்மெண்ட் ஓபன் செய்துப் பார்த்தால் ஒரு பெண், வயது 20. விஸ்காம் முடித்திருந்தாள். நான் இருந்த போஸ்டிங்குக்கே அவளும் அப்ளை செய்திருந்தாள். இதென்னடா வம்பாப் போச்சி என்று மெயிலை பாஸுக்கு மறைத்து நானே அவளுடைய யாஹூ மெயிலுக்கு ஒரு ரிப்ளை அனுப்பினேன். எங்க ஆபிஸ்லே லேடிஸை எல்லாம் சேக்குறதில்லை. அதுவும் "சந்தியா"ன்னு பேரு இருந்தா சத்தியமா சேத்துக்க மாட்டோம் என்ற ரீதியில் என்னுடைய யாஹூ ஐடியில் இருந்து அவளுக்கு மின்னஞ்சல் செய்தேன். நான் வேண்டுமானால் வேறு ஏதாவது எனக்குத் தெரிந்த கம்பெனிகளில் வேலைக்கு சொல்லிப் பார்க்கிறேன் என்று அடிஷனலாக ஒரு பிட்டு போட்டு விட்டேன்.

என் அடிஷனல் பிட் அவளை கவர்ந்திருக்கக் கூடும். Thanks for your concern என்று ரிப்ளை செய்தாள். அப்போது அவளும் ஒரு ஏஜென்ஸியில் ட்ரைய்னியாக இருந்தாள். யாஹூ சாட்டில் பிகர்களுக்காக நான் அலைந்துக் கொண்டிருந்த நேரம் அது. பிகர் பெயரில் சில நாதாரிகள் என்னுடன் சாட் செய்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரிஜினல் பிகரே ஒன்று மாட்டிவிட்டதில் ஏக குஷி. நாம் ஒரு முறை சாட் செய்யலாமா என்று கேட்டேன். As usual பாசிட்டிவ்வான பதில் அவளிடமிருந்து வந்தது.

ராகுகாலம், எமகண்டமெல்லாம் இல்லாத ஒரு நேரத்தில் அவளது ஐடிக்கு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஒன்று அனுப்பி பிஸியா? என்று கேட்டேன். இல்லை என்றாள். மெதுவாக என் அறிமுகப்படலத்தை ஆரம்பித்து ரொம்பவும் டீசண்டாக மூவ் செய்தேன். அவளுடைய ஒர்க்கிங் ஸ்டைல் குறித்து விசாரித்தேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு இருந்தது.

வழக்கம்போல அவளுக்காக ரொம்ப அக்கறைப்படுபவன் போல சில டெக்னிக்குகளை எடுத்து விட்டு மெல்ல மெல்ல பர்சனல் மேட்டருக்கு வந்தேன்.

"நீ பார்க்க எப்படி இருப்பே?"

"ஷாலினி மாதிரி இருப்பேன்"

"நானும் பார்க்க அஜித் மாதிரி தான் இருப்பேன்"

"அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?"

"ஆமாம். அஜித் மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்"

"அதானே பார்த்தேன்?"

"அஜித்தை விட சூப்பரா இருப்பேன்"

"அட்றா.... அட்றா.... அட்றா.... நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?"

"நேர்ல வேணா பாப்போமே?"

"இப்ப வேணாம். இன்னொரு நாள் பாக்கலாம்"

இவ்வாறாக சாட்டிங் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் நான் தினமும் அலுவலகத்துக்கு வருவதே அவளுடன் சாட்டிங் செய்வதற்கு என்றாகிவிட்டது. அவள் செல்லும் பஸ்ரூட், அவளது குடும்பம் என்று மெல்ல மெல்ல விசாரித்து... எப்போதும் சாட்டிங் ஸ்டார்ட் ஆகும்போது அங்கிளும், ஆண்டியும் (அவளது பெற்றோர்) நலமா? என்று விசாரித்து ஆரம்பிப்பது எனது டெக்னிக்காக இருந்தது. அவளும் இந்த பர்சனல் அட்டாக்கில் ரொம்பவே கவிழ்ந்து போய்விட்டாள்.

தினமும் பீச்சுக்கோ, பார்க்குக்கோ வரச்சொல்லி சந்திக்க நான் அவளை வற்புறுத்த அவளும் மறுக்காமல் இன்னைக்கு வேணாம்... நாளைக்கு... நாளன்னைக்கு என்று நாள் கடத்தினாள். கொஞ்சமாக எனக்கு சந்தேகம் வர அவள் முதலில் பெண்தானா? இல்லை நம்மை யாராவது நயவஞ்சகமாக ஏமாற்றுகிறார்களா என்று சந்தேகம் வந்து விட்டது. என் கைப்பேசி எண்ணை அவளுக்கு கொடுத்து பேசச்சொன்னேன். எண்ணைக் கொடுத்து விட்டு தொலைபேசி அழைப்புக்காக நான் காத்திருந்த நொடிகள் ஒவ்வொன்றும் ஒரு யுகம்.

தொலைபேசி அழைக்கிறது. சட்டென்று எடுத்து "ஹலோ நான் கிச்சா" என்று சொல்ல எதிர்முனையில் ஒரு ஆண்குரல் "மாப்பிள்ளே NAC Campaign முடிஞ்சுதாடா?" என் அலுவலக நண்பன். "போடாங்கொய்யா" என்று சொல்லிவிட்டு அவளது அழைப்புக்காக காத்திருந்தேன். அடுத்த போன்கால் எடுத்தவுடன் என் காதில் தேன் பாய்ந்தது...

"கிச்சா இருக்காரா?"

"ஜொள்ளுங்க சந்தியா" - சிஸ்டர் என்று அழைத்துவிடக் கூடாதென்று ரொம்பவும் ட்ரெய்னிங் எடுத்து வைத்திருந்தேன். கொஞ்ச நேரம் பேசினோம். சுவாரஸ்யமாக எதுவும் பேசவில்லை என்றாலும் அவள் பெண் தான் என்று எனக்கு உறுதியானது. இப்படியாக தினமும் சாட்டிங், தொலைபேசி என்று பேசிப்பேசி மனதுக்குள் அவளை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவள் என்ன நினைக்கிறாள் எப்படி இருப்பாள் என்று தெரியாமலேயே.

ஒரு நாள் சாட் செய்யும்போது ஒரு புதிய குண்டைப் போட்டாள். அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவனை தீவிரமாக காதலிப்பதாக. வெறுத்துப் போன நான் ரெண்டு நாள் லீவு போட்டுவிட்டு பாரிலேயே பழியாகக் கிடந்தேன். மொபைலையும் ஆப் செய்து வைத்திருந்தேன். இரண்டு நாள் கழித்து அலுவலகம் சென்றவன் யாஹூ மெசென்ஜரை Uninstall செய்துவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவன் நொந்துப் போனேன். நூற்றுக்கும் மேற்பட்ட மெயில்கள் சந்தியாவிடமிருந்து. எல்லா மெயிலிலும் "SORRY" "SORRY" தான். என்னை சும்மா சீண்டிப் பார்த்தாளாம். அவள் யாரையும் காதலிக்கும் ஐடியாவில் இல்லையாம். "யப்பா, நம்பளுக்கு சான்ஸ் இன்னமும் இருக்கு" என்று குஷியானேன்.

பசுமையே இல்லாத பாலைவனமாக இருந்த என் வாழ்க்கை அவளால் கொஞ்சம் சுவாரஸ்யமானது. இடையில் எனக்கு ஏன் அந்த குரங்குப் புத்தி வந்ததோ தெரியவில்லை. என் நண்பன் ஒருவனை அவளது அலுவலகத்துக்கு அனுப்பி அவள் எப்படி இருக்கிறாள்? என்று பார்த்துவரச் சொன்னேன். வந்த பதில் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. நிறைய கருப்பு. தெத்துப் பல். ரொம்ப ஒல்லி. மொத்தத்தில் பாட்டாளி படத்தில் வந்த பெண்வேஷம் போட்ட வடிவேலு மாதிரி இருக்கிறாள் என்றான் நண்பன். ம்ம்ம்ம்.... நமக்கு வாய்ச்சது இவ்வளவுதான் என்ன செய்வது காதலித்து(?) தொலைத்துவிட்டோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

அன்று ஒரு நாள் இரவு 9 மணி இருக்கலாம். எனக்கு அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருந்தது. ரிலீப்புக்காக யாஹூ மெசெஞ்சரை திறந்தேன். என்ன ஆச்சரியம்? சந்தியா ஆன்லைனில் இருந்தாள். பொதுவாக அலுவலக நேரத்தில் மட்டுமே ஆன்லைனில் இருப்பவள் இரவு 9 மணிக்கு என்னத்தைச் செய்துக் கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டு வழக்கம்போல "Hai Darling" என்று டைப் செய்தேன். பதிலில்லை. மவுனம்.

ஏனோ அன்று என் காதலை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பூடகமாக அவளைக் காதலிப்பதை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் லாக்-அவுட் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். மொபைலில் அவள் வருவாள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து தூக்கம் தொலைத்த இரவாக அது மாறியது. +2 ரிசல்ட்டுக்கு கூட நான் அந்த அளவு டென்ஷன் ஆனதில்லை (+2 ரிசல்ட் என்னவாகும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதும் ஒரு காரணம்)

மறுநாள் அலுவலகம் சென்று யாஹூ தூதுவனை திறந்துப் பார்த்தேன்.ஆன்லைனில் இருந்தால் "hi" சொன்னேன். பதில் இல்லை. "Sorry" சொன்னேன். அதற்கும் பதில் இல்லை. தொடர்ந்து கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும் அவளிடமிருந்து பதில் ஏதும் இல்லை. அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசிப் பார்த்தேன். "இல்லை" என்று அவள் சொல்ல சொன்னதாக சொன்னார்கள். அவள் ஸ்டைலிலேயே நூற்றுக்கணக்கான "SORRY" மெயில் அனுப்பியும் எந்த Responseம் இல்லை. சுமார் ஒரு மாதக்காலம் போராடி, போராடி வெறுத்துப் போனேன்.

கிட்டத்தட்ட அவளை மறந்து விட்ட ஒரு நாள் காலை...

யாஹூவில் சென்னை சாட்ரூமில் இருந்தேன்.

"Hi"

"Hi"

"ASL Pls?"

"I am kichcha 22/M/Chennai. Your ASL?" - (22 என்பது நமக்கு என்றுமே மாறாதது :-)

"I am Bhuvana 19/F/Chennai"

ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறக்கும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

வருசம் பிறந்தாச்சு!!!!

"வருசம் பிறந்து இன்னியோடு நாலு நாளாகிப் போச்சு. இன்னும் இந்த பயலுவெலே சங்கத்து பக்கம் காணோம், ஆளுக்கு ஆளு வருஷபிறப்புக்கு லீவு வேணுமின்னு போனாய்ங்க, ஆனா இன்னவரைக்கும் ஒருத்தனும் திரும்பி வரலை. புதுவருசம் அதுவுமா எதாவது செய்யவேணாமா சங்கத்திலே?? ஏலேய் எங்கடா போய் தொலைச்சீங்க அப்ரெண்டிஸ்களா???"

தல இவ்வாறு சங்கத்து குடிசைக்குள்ளே இருந்து சவுண்ட் விட்டுக்கிறோப்பா மெல்லமா பூனைமாதிரி ஒரு உருவம் உள்ளே நுழைகிறது.

"ஏலேய்! போர்வாள் என்னாச்சு ஒனக்கு? ஒரு நா'தான் லீவுன்னு சொல்லிட்டு இம்பூட்டு நாளு கழிச்சு வந்திருக்கே?"

"ஆமாம் இங்கே வந்து என்ன கிழிக்கப்போறேன், ஒன்னைய வச்சு கச்சேரி நடத்தி கல்லா கட்டலாமின்னு பார்த்து ஒன்னே விக்கிபசங்ககிட்டே டீயூசனெல்லாம் அனுப்பிவைச்சா ஆனா நீ இன்னும் கடைசிபெஞ்சு மாப்பிள்ளை கணக்கா ஒன்னுமே தெரியமே இருக்கிற??"

"ஏலேய் நீங்கெல்லாம் என்னையே வச்சு காமெடி பண்ணுறது பத்தலே'ன்னு அதே வேறே கத்துகனுமின்னு வேறே சொல்லிக்கிட்டு திரியீறீங்க! கச்சேரியும் சீக்கிரத்திலே பண்ணிப்பிடுவோம்! இன்னும் சங்கத்து சிங்கங்களை எங்கேய்யா???"

"இந்தா வந்துட்டோம்" ன்னு சங்கத்து சிங்கங்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைகின்றனர்.

"தள! எங்கே போயிட்டிங்க... ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடுது'ன்னு கவிஜ எழுதலாமின்னு பார்த்தா முன்னாடி யாரோ ஒருத்தர் இதே வரிகளை எழுதிப்பிட்டாராம்!"

"எதுக்கு தல? என்னை தேடினே??? என்ன பிரச்சினை உனக்கு??"

"நீங்க எல்லாருமே எனக்கு பிரச்சினைதான்! இதிலே வேறே எங்கேயிருந்து வரப்போகுது இனிமே பிரச்சினையெல்லாம்???"

"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

"ஏலே புலி எதுக்கு இம்புட்டு சூடா ஆகிறே??? இரை பலமோ?"

"தல நீப்பாட்டுக்கு பேசிட்டே போறே?? ஒனக்கு என்னா எங்களாலே பிரச்சினை?"

"இங்கே ஒருத்தன் என்னை வச்சு காமெடி பண்ணினது பத்தாதுன்னு கச்சேரி வைச்சே ஆகணுமின்னு அலையிறான், இன்னோருத்தன் அதுக்கு போட்டுக்கிறே டிரெஸின்னு ஊர்உலகத்திலே திரிஞ்சுக்கிட்டு இருக்கிற நொண்டி மாட்டுக்கிட்டே முட்டி வாங்குமின்னு அலையிறான்? இன்னும் எத்தனை உதாரணம் வேணும் கட்டரு ஒனக்கு??"

"தல அப்பிடியெல்லாம் பேசாதே ஒனக்காக என்னோட டிராக்டெரயெல்லாம் ஓசியா தாரென்னு சொன்னேலே?? அப்புறமா என்னா வேணும்?" இது விவசாயி

"ஏலேய் விடுங்கய்யா? சும்மா ஒரே பேச்சே பேசிக்கிட்டு??? மாசம் பிறந்துருச்சு, பயப்புள்ளக நீங்க ஒன்னும் பண்ணுறேமாதிரி காணோம்? என்னாலே உங்க ஐடியா???"

"இன்னும் சங்கம் பீட்டா, பாட்டா, தோட்டா'ன்னு இழுத்துக்கிட்டு தான் இருக்கு? நீ கேட்டா அதெல்லாம் சொல்லாமின்னு இருந்தோம்! ஆனா நீயே கேட்டுட்டே?"

"அதெல்லாம் சரித்தான் போ.வா, என்ன அடுத்தகட்ட நடவடிக்கை அதே பேசுங்க மொதல்லே?? புத்தம்புதுசு, பொலிவு, மலிவுன்னு என்னோமே அறிவிப்பு விட்டு அதே வழக்கம்போலே புஸ்வாணமா ஆக்கிறாதீங்கலே சாமிகளா!"

"இல்லே தல! ஒனக்கு நாங்க எப்பிடியெல்லாம் ஆப்பு வைச்சோமின்னு விலா'வாரியா விளக்கமா சொல்லுறது அதுதான்! அதுனாலே அதே திரும்ப கொண்டுவந்து நம்மோளோட வீரவரலாற்றை நிருபிக்கிறதுதான் ஒன்னை பின்பற்றி வர்ற எங்களை மாதிரி சிங்கங்களுக்கு அழகு!"

"அப்பிடி சொல்லு! அதேயும் தெளிவா சொல்லு போ.வா. நீ பேசினே வாக்கை நிறைவேற்றுவே'ன்னு நம்பிக்கை இருக்கு! இந்தமாச அ.வா'வே வரவேற்று செலவு பண்ணோமின்னு எம்புட்டு ஆட்டையே போட்டிங்க அப்ரெண்டிஸ்களா???"

"தல மைண்ட் யூவர் வேர்ட்"

"ஏலேய் ராயலு? இருக்கிறது தமிழ்நாட்டிலே ஆனா சவுண்ட்விடறது இங்கிலிபிஸிலே வேறேயா"?

"அதுக்கு காரணம் நான் சொல்லுறேன் தல!"

"அப்ரெண்டிஸ்'கிட்டே அப்பிடி என்ன தீடீர் மாற்றமின்னு சொல்லு பாண்டி!"

"நான் பிகர்வலம் போறேப்போ நம்மை ராயல் தம்பியேயும் கைத்தாங்கலா கூட்டிட்டு போனேன். நான் பார்க்கிற பட்சிகளிலே கொஞ்சகாணுதான் பார்த்தாப்பலே! ஆனா அதிலிருந்து ஒரே பீட்டர் மயம்தான், இப்போதானே வந்திருக்காரு! அதுதான் இப்பிடி ரீயாசக்சன் கொடுக்கிறார்ப்பலே"

"அது சரி! நீ கோடிக்கணக்கிலே பார்த்தாலும் ஒரேமாதிரி ஜொள்ளு விடுவே! ஒன்னைமாதிரியெல்லாம் ஜொள்ளிலே ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்க யாரால்லும் முடியாது! ஆனா ஒன்கூட வந்ததுக்கே இந்தபயலுக்கு இம்பூட்டா? சரி இம்மாசத்து அ.வா வரவேறப்பு வரவு-செலவு என்னாலே ஆச்சு?"

"ஐயோ தல அவரு ஒன்னாருவா குடுத்து பஸ்ஸிலே போயிருறாரு, இல்லேன்னா ஒட்டை சைக்கிளே எடுத்துக்கிட்டு போயிறாரு! நம்மளை மாதிரி ரிச்சா இல்லை"

"ராயலு என்னாலே சொல்லுறே?? அவருக்கிட்டே சொல்லிட்டீங்களா?? அட்லாஸின்னா என்னான்னு??"

"இல்லேமேயா அவரும் ரெடியா'தான் இருக்காரு! படு லோக்கலா அதுவும் கலக்கலா ஆப்பு வைக்க? ஹி ஹி நாங்கதான் இந்தப் பக்கம் வரலை! ஆனா எங்க எல்லாருக்கும் முன்னாடி வந்துக்கிட்டு சவுண்ட் விட்டுக்கிட்டு இருக்கிறே?"

"வெயிட் பண்ணு! வெகுச் சீக்கிரத்திலே ஒன்னையே மீட் பண்ணுறோம்!!" வந்த வரிசையிலே எல்லா சங்கத்து சிங்கங்கள் வரிசையாக வெளியே செல்கின்றனர்.

"டேய் டேய்'ன்னு 7.1 ஸ்டீரியோ எப்க்ட்'லே தல கதறுகிறார்.

தல கைப்புள்ள'யை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சந்திக்க சங்கத்துக்குள் நுழைக்கிறார் இம்மாதத்து அட்லாஸ் வாலிபர் லக்கிலுக்........

(தொடரும்)

Aக்கம்!

நான் +2 படித்துக் கொண்டிருந்தபோது என் வீட்டுக்கும், பள்ளிக்கும் சுமார் 5 கி.மீ தூரம் இருக்கும். லஞ்ச் அவரில் வீட்டுக்கு வந்தே சுடச்சுட சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போகும் வாய்ப்பிருந்தது. 1 to 2 லஞ்ச் அவர் என்பதால் கால்மணிநேரத்தில் சைக்கிளை மிதித்து வீட்டுக்கு வந்து கால் மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு உடனே பள்ளிக்கு திரும்ப முடிந்தது.

இந்த மாதிரியான லஞ்ச் அவர் ட்ராவலில் எனக்கு அறிமுகமானவர்கள் தான் மூர்த்தியும், சண்முகமும். இருவரும் என் வகுப்புத் தோழர்கள் என்றாலும் அவர்கள் வேறு "தாதா" குரூப், நான் வேறு "மாபியா" குரூப். அவ்வளவாக டச்சப் ஆரம்பத்தில் இல்லை. எனினும் மூவரும் ஒரே வழியில் தான் வீட்டுக்கு வந்தாக வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பேச்சுத்துணை நண்பர்களாக மாறினோம். பள்ளியிலிருந்து போகும்போது முதலில் மூர்த்தி வீடு வரும். பின்னர் சண்முகம் வீடு வரும். கடைசியாக நான் மட்டும் தனியாக வீட்டுக்குப் போவேன்.

நான் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு திரும்பி வரும் வரையில் மூர்த்தியும், சண்முகமும் எனக்காக ஒரு பேருந்து நிலையம் அருகில் காத்திருப்பார்கள். ஆரம்பத்தில் 5 நிமிடம் காத்திருந்தார்கள். போகப்போக 10 நிமிடம், 15 நிமிடம் என அவர்கள் எனக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

காத்திருக்கும் நேரத்தில் போர் அடிக்குமே? டைம்பாசுக்காக 25 காசு அஜந்தா பாக்கு வாங்கிப் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாக்கு போரடித்ததால் மாணிக்சந்த், பான்பராக் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தார்கள். அதுவும் கடுப்பாக இருந்ததால் பக்கத்திலிருந்த பீடா கடையில் ஜர்தா பீடா வாங்கிப் போட ஆரம்பித்தார்கள். இப்படியாக அவர்கள் உருப்படாமல் போனதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன். ஜர்தா பீடா பார்ட்டிகள் தாங்கள் கெட்டது மட்டுமில்லாமல் எனக்கும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்தி, என் மூலமாக என் வகுப்புக்கே பீடா போடும் பழக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் என் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே (குடுமி ரங்கராஜ் உட்பட) ஜெமினி விக்ரம் கணக்கில் வகுப்பு நேரத்தில் கூட ஜர்தா பீடாவை வாய்க்குள் அதக்கிக் கொண்டு கண்ட இடத்தில் துப்பி பள்ளியையே சிவப்பு மயமாக்கிக் கொண்டிருந்தோம்.

ஜர்தாவும், மாவாவும் மாறி மாறி போட்டு வாயின் ஒரு பக்கம் வெந்துவிட இனிமேல் ஜர்தா போடுவதில்லை என்று நான், மூர்த்தி, சண்முகம் மூவரும் ஒரு புத்தாண்டு அன்று முடிவெடுத்தோம். இனிமேல் பீடாவுக்குப் பதிலாக கொஞ்சம் மைல்டாக "தம்" அடிக்கலாம் என்ற யோசனையை நான் முன்வைத்தேன். மற்ற இருவராலும் அது சந்தோஷமாக வழிமொழியப்பட்டது. முதலில் பனாமா பில்டர் வாங்கி அடித்தோம். பின்னர் சார்ம்ஸ், கோல்டு பில்டர், கிங்க்ஸ் என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது. காசில்லாத நேரத்தில் காஜா பீடியும் உண்டு.

இவ்வாறாக எங்கள் லஞ்ச் டைம் பிரெண்ட்ஷிப் நாளோரு பீடாவும், பொழுதொரு தம்முமாக வளர ஆரம்பித்தது. சகல விஷயங்களையும் அலசுவோம். கட் அடித்து சினிமாவுக்கும் போவதுண்டு. சுவரேறிக் குதிக்கும்போது ஹெட்மாஸ்டரிடம் கையும், களவுமாகப் பிடிபட்டு நாளெல்லாம் முட்டிப் போட்டதுமுண்டு.

ஒரு நாள் மூர்த்திக்கு திடீரென்று ஏனோ ஒரு Aக்கம் ஏற்பட்டது. "மச்சான், கேசட் வாங்கி சாமிப்படம் பார்க்கணும்டா" என்றான். சண்முகத்துக்கும் அதே எண்ணம் இருந்திருக்கும் போல. பலமாக ஆமோதித்தான். எனக்கு உள்ளுக்குள் கொஞ்சமாக உதற ஆரம்பித்தது. எங்கள் ஏரியாவில் இதுமாதிரி சாமிப்படங்களுக்கு புகழ்பெற்ற தியேட்டர் ஆர்.கே. (ராமகிருஷ்ணா என்பதின் சுருக்கம், அந்த தியேட்டர் இப்போது ராஜாவாகியிருக்கிறது). அந்த தியேட்டருக்கு போகும் சில பசங்களை (சரவணா, மோகன்) கெட்ட பசங்க என்று ஒதுக்கி வைத்திருந்தோம். "இப்போ நாமளே அந்தக் காரியத்தை பண்ணுறது என்னடா நியாயம்?" என்று கேட்டேன். "மச்சான் யாருக்கும் தெரியாம நாம மட்டும் பாத்துடலாம், வெளியே மேட்டர் லீக் ஆவாது" என்று சண்முகம் சொன்னான். அப்போதெல்லாம் சிடி, டிவிடி கிடையாது. வீடியோ கேசட் தான்.

கடைசியாக சண்முகம் வீட்டில் கேசட் போட்டுப் பார்ப்பதாக முடிவு செய்தோம். காரணம் சண்முகத்தின் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஒர்க்கிங். 6 மணிக்கு தான் வீடு திரும்புவார்கள். மூர்த்தி வீட்டிலும், என் வீட்டிலும் எப்போதும் யாராவது இருந்து தொலைப்பார்கள் என்பதால் சண்முகத்தின் வீடு இந்த மேட்டருக்கு வசதியாக இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் நங்கநல்லூரில் ஒரு கேசட் கடையில் நானும், மூர்த்தியும் பக்கபலமாக இருக்க சண்முகம் தில்லாக (அவனுக்கு தான் அப்போது மீசை இருந்தது) "சாமிப்படம் இருக்கா" என்று கேட்டான். கடைக்காரர் எங்களை கலாய்ப்பதற்காக "சரஸ்வதி சபதம், திருவிளையாடல், ஆடிவெள்ளி இருக்கு. எது வேணும்?" என்று கேட்டார்.

நான் மெதுவாக மூர்த்தியிடம் "வேணாம் மச்சான். ஏதாவது பிரச்சினை ஆயிடப் போவுது" என்றேன். சண்முகமோ முன்பை விட செம தில்லாக "அண்ணே. நான் கேக்குற சாமிப்படம் வேற" என்று தெளிவாகச் சொல்லிவிட்டான். கடைக்காரரும் கடையின் பின்பக்கமாக போய் ஏதோ ஒரு கேசட்டை பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்தார். மூர்த்தி கடைக்காரரிடம், "அண்ணே இது இங்கிலிஷா, தமிழா இல்லை மலையாளமா" என்று கேட்டான். கடைக்காரர் ஏற்கனவே சண்முகத்துக்கு அறிமுகமானவர் போல. "தம்பி! இதுக்கெல்லாம் லேங்குவேஜே கிடையாதுப்பா. இருந்தாலும் சொல்லுறேன் இது இங்கிலிஷ்" என்று சொல்லிவிட்டு கேணைத்தனமாக சிரித்தார்.

கேசட் கிடைத்ததுமே சுமார் 3 மணியளவில் சண்முகம் வீட்டுக்கு ஓடினோம். இந்த மேட்டர் யாருக்கும் லீக் ஆகிவிடக்கூடாது என்று பிராமிஸ் செய்துக் கொண்டோம். மூர்த்தி தான் ஒருவித கலைத்தாகத்துடன் மூர்க்கமாக இருந்தான். கேசட்டை வி.சி.ஆரில் செருகிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தோம். ஏதோ ஆங்கிலப்பட டைட்டில் ஓடியது. "மச்சான் பேரை பார்வர்டு பண்ணுடா" என்று மூர்த்தி அவசரப்பட்டான். அந்த வி.சி.ஆரில் ரிமோட் வசதி இல்லாததால் ப்ளேயரிலேயே சண்முகம் பார்வர்டு செய்துக் கொண்டிருந்தான். திடீரென டி.வி. இருளடைந்தது. வி.சி.ஆரும் ஆப் ஆகிவிட்டது. போச்சு கரெண்ட் கட். அந்த கந்தாயத்து வி.சி.ஆரில் கரெண்ட் கட் ஆனவுடன் கேசட்டை வெளியே எடுக்கும் வசதி இல்லை.

கொஞ்ச நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என்று வெயிட் செய்தோம். வரவில்லை... நேரம் 4.... 4.30 என வேகமாக பயணிக்கத் தொடங்கியது. 5.30ஐ முள் நெருங்கும் வேளையில் கூட கரெண்ட் வருவதாகத் தெரியவில்லை. சரியாக 6 மணிக்கு சண்முகத்தின் அப்பா வேறு வந்து விடுவார். அவர் வந்துவிட்டால் போச்சு. சண்முகம் மாட்டிக் கொள்வான் (உடன் நாங்களும் தான்) மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். திரும்பி வருவது போலத் தெரியவில்லை. நானும் மெதுவாக "சண்முகம். ட்யூஷனுக்கு போனம்டா. டைம் ஆவுது" என்றேன். முகம் வெளிறிப் போயிருந்த சண்முகமோ, "டேய் ப்ளீஸ்டா... கொஞ்ச நேரம் இருடா" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். அவன் அப்பா வரும்போது நானும் அருகில் இருப்பது Safe என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.

5.45 - கரெண்ட் வருகிற பாடாகத் தெரியவில்லை. டென்ஷன் கூடிக்கொண்டே போனது. என்னடா இது தேவையில்லாத ஒரு மேட்டரில வந்து மாட்டிக்கிட்டமே என்று கடுப்பாகியிருந்தேன். சண்முகத்தின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்ததைப் போலத் தெரிந்தது. பொதுவாக எதற்குமே பயப்படாமல் தில்லாக நிற்கிற அவனே இப்படி என்றால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசித்தேன். மனசுக்குள் முருகனை வேண்டினேன். அப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். "முருகா கரெண்ட் வரணும்" "முருகா கரெண்ட் வரணும்" என்று மந்திரம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.

5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டார் போல. கரெண்ட் வந்தது. சண்முகம் ஒளிவேகத்தில் இயங்கி கேசட்டை எடுத்து என் பனியனுக்குள் திணித்தான். "மச்சான்! ஓடிப்போயி கேசட்டை கடையிலே கொடுத்துடு, அப்பா வர்றப்போ நான் இங்கே இல்லேன்னா அடி பின்னிடுவார்" என்றான். கேசட்டை செருகிக் கொண்டு என் சைக்கிளை எடுத்தேன். கேட் திறந்துக் கொண்டு சண்முகத்தின் அப்பா உள்ளே வந்தார். "குட்மார்னிங் அங்கிள்" என்று சொல்லிவிட்டு மெதுவாக சைக்கிளை நகர்த்தினேன். "குட்மார்னிங் இல்லேடா... குட் ஈவ்னிங்டா Fool" என்றவாறே வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் நல்ல பையன் மாதிரி சண்முகம் ஏதோ எகனாமிக்ஸ் டெபினிஷியனை சத்தம் போட்டு படிக்கும் சத்தம் வெளியே கேட்டது. தப்பித்த நிம்மதியில் மெதுவாக சைக்கிளை வீடியோ கடைக்கு மிதிக்க ஆரம்பித்தேன்.

சிஸ்டர் ஐ லவ் யூ!

"ஒரு பேஷண்ட் நர்ஸை லவ் பண்ணுறாரு. அவரு நர்ஸ் கிட்டே எப்படி ப்ரபோஸ் பண்ணுவாரு?"

"சிஸ்டர் ஐ லவ் யூ"

- இது எஸ்.எம்.எஸ்.களிலும், மேடை நாடகங்களிலும் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு ஜோக். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு துரதிருஷ்டவசமான நிலை நான் பத்தாம் வகுப்பு படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்த்தாலே போதும், பசங்களின் உள்ளங்கள் பற்றிக் கொள்ளும். கயல் விழியாள். கொடி இடையாள். தாவணித் தென்றல். என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன். வேறு பிகரை டாவடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கவுரவத்துக்கு இவளை காதலித்தார்கள்.

என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) நானும் இவளை அசுரத்தனமாக காதலித்தோம். அவன் கொஞ்சம் வைல்டாகவும், நான் கொஞ்சம் மைல்டாகவும் மூவ் செய்துக் கொண்டிருந்தோம். செந்தில் அவளை வேகமாக சைக்கிளில் பாலோ செய்வது, அவள் எதிரில் பெரிய ரவுடி மாதிரி முரட்டுத் தனமாக நடந்துகொள்வது என்று ஒரு ரூட்டில் போய்க் கொண்டிருந்தான். நானோ அவள் ட்யூஷனுக்கு சேர்ந்த இடத்திலேயே நல்ல பையன் மாதிரி சேர்ந்து பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கவர முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

இருந்தும் நாங்கள் இரண்டு பேருமே அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. அவளுடன் பேசினாலே போதும், மடக்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம். பேசுவதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். எங்களை மாதிரியே வகுப்பு நண்பர்களும் (எதிரிகளும்) ஒவ்வொரு ரூட்டில் அவரவர் மூளை அளவுக்கு ஏத்தமாதிரியான வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் ஆச்சாரமான அய்யங்காராத்துப் பொண்ணு என்பதால் அவளை நெருங்கவே எல்லோருக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது.

பாழாய்ப்போன ஒரு நாளில் கிளாஸ் முடிந்தது. சைக்கிள் ஸ்டேண்டில் சைக்கிள் எடுக்க நானும், செந்திலும் போனோம். செந்திலுக்கு சைக்கிள் இல்லை. என் சைக்கிளை ஓசி ரவுண்டு வாங்கி ஸ்டைலாக ஓட்டுவான். என் சைக்கிள் பானு சைக்கிளின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுவே எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சைக்கிளை எடுக்கும்போது செந்திலின் குரங்குமூளை உள்ளுக்குள் ஏதோ வேகமாக செயல்படத் தொடங்கியது. என் சைக்கிள் கீயை வாங்கியவன் சைக்கிளை எடுக்காமல் பக்கத்திலிருந்த பானுவின் சைக்கிள் கேரியர் மேல் உட்கார்ந்துக் கொண்டான்.

"மச்சான் கெளம்புடா. செயிண்ட் தாமஸ் ஸ்கூல் விட்டுட்டு இருப்பாங்க. பிகர்ங்க எல்லாம் நம்பளை பாக்காம ஏங்கிப் போயிருக்கும். டைம் ஆவுது" என்றேன்.

"இருடா மாமு. பானு வந்திருவா. வந்து சைக்கிளை எடுக்க முடியாம என் கிட்டே வந்து "எஸ்க்யூஸ் மீ. இது என் சைக்கிள்னு" சொல்வா. என்கிட்டே பேசிட்டாலே போதும். அவளை எப்படியாவது பிக்கப் பண்ணிடுவேன்" என்றான் செந்தில்.

எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இவனுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி ஐடியா எல்லாம் தோன்றுகிறது? நாம வேஸ்ட்டு. எப்படியோ இவன் தான் பானுவை மடக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நிமிடங்கள் கழிந்தது. செந்தில் மீதிருந்த கோபத்தால் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். அவனும் ஏதோ திட்டத்தை யோசித்துக் கொண்டே (அல்லது யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டே) எதுவும் பேசாமல் இருந்தான்.

தூரத்தில் பானு. அன்ன நடை. மின்னல் இடை. மயில் மாதிரி ஒயிலாக வந்தாள். அவளை தூரத்தில் பார்க்கும்போது என் உள்ளத்தில் காதல் பொங்கும். ஏனோ தெரியவில்லை, அவள் அருகில் வந்தாலே "தட தட"வென்று சரக்கு ரயில் மாதிரி சத்தம் போட்டு கன்ப்யூஸ் ஆகிவிடும்.

பானு அருகில் வந்ததுமே சட்டென்று என் சைக்கிளில் செயினை மாட்டுவது போல நடித்து சட்டென்று குனிந்துக் கொண்டேன். செந்திலோ அவள் சைக்கிள் கேரியரில் வசதியாக அமர்ந்துக் கொண்டு கையிலிருந்த கைடை எடுத்து படிக்கிற பையன் மாதிரி ரொம்ப உன்னிப்பாக படிக்க ஆரம்பித்து விட்டான். பானு என் அருகில் வந்து நின்றாள். அவள் சைக்கிளைப் பார்த்தாள். சைக்கிளில் செந்தில் ஓரக்கண்ணால் அவளது "எக்ஸ்கியூஸ் மீ"க்காக காத்திருந்தான். மெதுவாக என்னைப் பார்த்தாள். அவள் கண்களை ஏறெடுத்துப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு (பயந்துக் கொண்டு) சைக்கிள் செயினை மாட்டி விடுவதில் மும்முரமாக இருந்தேன்.

30 நொடி கடந்தது. எதுவுமே நடக்கவில்லை. திரும்பிப் பார்த்தால் பானுவைக் காணோம். "மச்சான் என்னடா ஆச்சி?" என்றேன். "ஏதாவது கிளாஸ் ரூமிலே மறந்து வெச்சிட்டிருப்பா. போயி எடுத்துக்கிட்டு வருவா, டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு" என்றான். சொன்னவன் என் முகத்தைப் பார்க்கும் போது பீதி அடைந்துப் போயிருந்தேன். காரணம் தூரத்தில் பானு, அவளுடன் பெரிய குண்டாந்தடியுடன் டிரில் மாஸ்டர் நடராஜன். நடராஜன் அடித்தார் என்றால் ஒருவாரத்துக்கு அடிபட்ட இடத்தில் மரணவலி இருக்கும். பார்ப்பதற்கு சாமி விக்ரம் மாதிரி இருப்பார்.

"என்னலே... பொண்ணுங்க கிட்டே வம்பு செய்யறீளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர் எங்களது எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பாதவர் போல குண்டாந்தடியை எங்கள் மீது அதிரடியாக பிரயோகிக்கத் தொடங்கினார். "சார் சைக்கிள் செயின் கயட்டிக்கிச்சு" என்ற என் விளக்கம் அவரிடம் எடுபடவில்லை. என்னைவிட செந்திலுக்கு தான் செம அடி. எங்களை மாட்டி விட்டத் திருப்தியுடன் "களுக்"கென்று சிரித்துக் கொண்டே பானு சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். நடராஜன் மாஸ்டரிடம் கடுமையான எச்சரிக்கையைப் பெற்றுக் கொண்டு அடிபட்ட இடத்தில் செம வலியுடன் (உள்ளத்தில் இருந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது) நானும், செந்திலும் நொந்துப் போய் நடந்தோம்.

"சாரி மாமு. என்னால் நீயும் அசிங்கப் பட்டுட்டே. அவ இவ்ளோ பெரிய பஜாரியா இருப்பான்னு நான் நெனைக்கலே. சே அவளைப் போயி லவ் பண்ணோம் பாரு. இனிமே அவளை நெனைச்சிக்கூட பாக்கக் கூடாதுடா" என்றான் செந்தில்.

அடிபட்ட வலி மறைந்து உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கத் தொடங்கியது. அப்பாடா இனிமே இவன் நம்ம ரூட்டுக்கு வரமாட்டான். காம்பெடிஷன்லே ஒண்ணு குறைஞ்சது என்று நினைத்துக் கொண்டேன். வேகவேகமாக என் மூளை கணக்குப் போட்டது. இந்த சம்பவத்தையே காரணமாக வைத்துக் கொண்டு பானுவிட மன்னிப்பு கேட்கிற சாக்கில் அவளிடம் பேசிவிடலாம் என முடிவு செய்தேன். "பரவால்லடா மச்சான். ப்ரெண்டுக்காக தானே அடிவாங்கினேன். எனக்கு அவசர வேளை இருக்கு" என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு செந்திலிடமிருந்து எஸ்கேப்பாகி வேகவேகமாக சைக்கிளை மிதித்தேன்.

நேராக என் சைக்கிள் சென்றது என்னுடைய இன்னொரு உயிர்த்தோழனான மா.ப.ஓ.ப சரவணன் வீட்டில். மா.ப.ஒ.ப என்பது மாட்டுப் பல்லா, ஓட்டைப் பல்லா என்பதின் சுருக்கம். ஒரு அடிதடியில் பல் ஓட்டை ஆகிவிட்டதால் சரவணனுக்கு இந்த செல்லப் பெயரைச் சூட்டியிருந்தோம். சரவணன் உஷா என்றொருப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்தான். உஷாவை போய் எப்படித்தான் காதலிக்கிறானோ என்று நான் பலமுறை அதிசயித்ததுண்டு. ம்ம்ம்... காதலுக்கு கண்ணில்லை. அவன் காதலுக்கு உதவுவதாக நான் வாக்களித்திருந்தேன். அதுமாதிரியே என் காதலுக்கு(?) உதவுவதாக அவனும் வாக்களித்திருந்தான்.

நடந்த விஷயங்களை அவனிடம் சுருக்கமாகத் தெரிவித்து என்னுடைய டெக்னிக்கைச் சொன்னேன். அதாவது ட்யூஷன் முடிந்து ஆறு மணிக்கு பானு வீட்டுக்குத் திரும்புவாள். வழியில் அவளை மடக்கி நடந்த சம்பவத்துக்காக செந்தில் சார்பில் மன்னிப்பு கேட்டு "சிம்பதி வேவ்" கிரியேட் செய்து அவளுடன் பழகும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்வதே என் திட்டம். துணைக்கு மா.ப.ஒ.ப வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவனும் அவன் வேலை வெட்டியை எல்லாம் விட்டு விட்டு என்னுடன் வர பெரிய மனசுடன் சம்மதித்தான்.

சுமார் 5.50 மணியளவில் மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு முன்னாலிருந்த ஒரு சின்னத் தெருவில் என் BSA SLR சைக்கிளுடன் நின்றுக் கொண்டிருந்தோம். அவள் வந்ததுமே என்ன பேச வேண்டும் என்று மா.ப.ஒ.ப.வுடன் ஒத்திகை செய்திருந்தேன். அதாவது பின்வருமாறு நடக்கும் என்று நாங்களே முடிவு செய்திருந்தோம்.

அவள் சைக்கிளில் வருவாள். வழியை மறித்து என் சைக்கிள் நிற்கும். சைக்கிளுக்கு முன்னால் சோகமாக நான் நிற்பேன். மா.ப.ஒ.ப. அவள் என் அருகில் வந்து சைக்கிளை நிறுத்தியவுடன் டீசண்டாக விலகிச் சென்று விடுவான்.

"ஹலோ ஒரு நிமிஷம் நான் உங்கிட்டே பேசணும்" - நான்

"என்ன சொல்லு?" - அவள்

"சாரி. என் நண்பன் அநாகரிகமாக நடந்துக் கொண்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" - நான்

"பரவாயில்லை. அவன் இன்டீசண்டா பிகேவ் பண்ணாலும் நீ இவ்வளோ டீசண்டா நடந்துக்கறியே. தேங்க்ஸ்" - அவள்

- இப்படியாக ஸ்டார்ட் செய்து டாப் கியரில் எங்கள் காதல் பறக்கும் என்பது எங்கள் ஏற்பாடு.

சுமார் 6.00 மணிக்கு தூரத்தில் சைக்கிள் தெரிகிறது. சைக்கிளில் என் பானு. பத்தாண்டுக்கு முன்னால் அந்தப் பகுதியில் ஜனநடமாட்டம் ரொம்பவும் அபூர்வம். எப்போதாவது யாராவது ஓரிருவர் சைக்கிளில் செல்வார்கள். மாலை நேரங்களில் அதுகூட இருக்காது.

என் சைக்கிளைப் பார்த்தவுடனேயே ஸ்லைட்டாக ஸ்லோ செய்தாள். தலையைக் குனிந்து கொண்டே அவளை நிறுத்துமாறு கையால் சைகை செய்தேன். ஒத்திகைப் பார்த்த மாதிரியாக இல்லாமல் "திடுக்"கென்று மா.ப.ஒ.ப. ஓட்டம் பிடித்தான். நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அய்யோ.. என் வாய் குழற ஆரம்பித்தது.

"ஓஓஒ....ரு..... நிம்மிஷம்..."

".......??????????????"

"சாரி சிஸ்டர்....... என் ப்ரெண்டுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"

- சொல்லி முடித்தவுடன் தான் தெரிந்தது. பதட்டத்தில் அவளை சிஸ்டர் என்று சொல்லிவிட்டேன் என்பது. சே.... யானை தன் தலையில தானே மண்ணைப் போட்டுக் கொண்டது மாதிரி ஆகிவிட்டதே? தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த மா.ப.ஒ.ப. காதில் என்னுடைய "சிஸ்டர்" விளிப்பு கேட்டு விட்டது போல. ரிஸ்க் எதுவும் இல்லை என்று நினைத்தவன் திரும்பி வந்தான்.

"பரவாயில்லை கிச்சு. செந்தில் கூட சேராதே. உன்னை மாதிரி நல்ல பையனை கூட அவன் கெடுத்துடுவான்" - சொல்லி விட்டு பறந்து விட்டாள் என் திடீர் தங்கை. வேதனையுடன் மா.ப.ஒ.ப.வை பார்த்தேன். அவன் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

"மச்சான் தெரியாம சிஸ்டர்னு சொல்லிட்டேன். இனிமே அவளை என்னால லவ் பண்ண முடியாது. வெறும் ப்ரெண்ட்ஷிப் மட்டும் தான். இருந்தாலும் இங்கே நடந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா. மானம் போயிடும். பிராமிஸ் பண்ணு" என்றேன். ப்ராமிஸ் செய்தான்.

இருப்பினும் மறுநாள் வகுப்புக்குச் சென்றபோது எல்லா வகுப்புத் தோழர்களும் என்னை "மச்சான்... மச்சான்" என்று பாசமுடன் அழைத்தபோதே தெரிந்து விட்டது. மா.ப.ஓ.ப. மேட்டரை அவிழ்த்து விட்டு விட்டான் என்பது. அதுவரை என்னை "பிரதர்" என்று அழைத்த குள்ள சேகர் கூட "மச்சான்" என்று அழைத்தது தான் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

அட்டகாசமாக "ஓபனிங்" செய்தும் கூட இந்தக் காதலைப் பொறுத்தவரை "பினிஷிங்" சொதப்பி விட்டாலும் என்னுடைய எதிர்கால காதல்களுக்கும், பிகர்களை அணுகவேண்டிய முறைக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.