வாலிபமே வா... வா...

"வருத்தமில்லா வாலிபர் சங்கம்" - இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏதோ உருப்படாதவர்களின் சங்கம் என்று முகம் சுளிக்கும் வயோதிகர்கள் நிறைந்த உலகம் இது. வருத்தப்பட்டு என்ன ஆவப்போகுது என்று முடிவு கட்டி சங்கம் அமைப்பது ஒரு பெரிய குற்றமா என்ன? "வருத்தப்பட்ட வயோதிகர் சங்கம்" இதுவரை நமது சங்கத்தை விட பெரியதாக என்னத்தை சாதித்தது என்று சவால் விட்டு என் அட்லஸ் வாலிபர் மாதத்தை ஆரம்பிக்கிறேன். என்னையும் ஒரு வாலிபனாக மதித்து 2007 ஆண்டின் முதல் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி!

வால் முளைத்ததால் தான் "வாலி" என்று இராமாயண வாலிக்கு ஒரு பெயர் வந்ததோ என்று சில சமயம் நினைப்பேன். வால் இல்லாவிட்டாலும் வாலிக்கான குணநலன்கள் கைவரப்பெற்றவர்கள் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ நம்மை "வாலி"பர்கள் என்று அழைக்கிறார்கள். வாலிபப் பருவத்தில் வருத்தமில்லாமல் இருந்தவர்களைக் காட்டிலும் நாட்டுக்காக, வீட்டுக்காக வருத்தப்பட்ட வாலிபர்களையே அதிகமாக சரித்திரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.

"வாலிபம்" என்ற சொல்லினைக் கேட்கும் போது பலருக்கு பல விதமான எண்ணங்கள் தோன்றும். "கெயிட்டி", "ஜோதி" தியேட்டர் ரசிகர்கள் இந்த வார்த்தையைக் கேட்டதும் புரிந்துகொள்வது வேறு மாதிரி. இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் இந்த சொல்லை கேட்கும்போது மாவீரர் பகத்சிங்கையும், ஜனநாயக வாலிபர் சங்கத்தையும் நினைவுகொள்வார்கள். சிலபேருக்கு பாரதியும், இயேசுபிரானும் கூட நினைவுக்கு வருவார்கள். ஆத்திகர்கள் சிலருக்கு கிருஷ்ணபகவானின் வாலிபவயது குறும்புகள் நினைவுக்கு வரும். மொத்தத்தில் "வாலிபம்" என்பது ஒவ்வொருவரும் கடந்து வரும் ஒரு பருவம். கவலைகளின்றி வண்ணத்துப் பூச்சிகளாய் உலாவரும் ஒரு பருவம். சில பேருக்கு தங்கள் கொள்கை, குறிக்கோள் எதுவென்று இனங்காணும் பருவம். வளமான அல்லது மோசமான எதிர்காலத்துக்கான வாசலே வாலிபம் தான்.

வாலிப வயது நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்து வாழ்க்கை முழுவதுக்கும் சுவையாக அசைப்போடும்படியான நிகழ்வுகளாக அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் மறக்கமுடியாத ஒரு சம்பவம் அவன் வாலிபப் பருவத்தில் கட்டாயம் நிகழ்ந்திருக்கக் கூடும். அது முதல் காதலாகவோ, நட்புவட்டமாகவோ, மறக்கமுடியாத அனுபவமாகவோ அல்லது வேறு ஏதாவது கந்தாயமாகவோ இருக்கக் கூடும். அதுமாதிரியான மறக்க முடியாத சம்பவம் ஒன்றினை நினைவுகூர்கிறேன்.

நம்ம ஹீரோவுக்கு அப்ப இருபது வயசு. கட்டிளம் காளை என்று சொல்லமுடியாத டொக்கான, ரொம்ப ஒல்லியான உருவம் (கிட்டத்தட்ட துள்ளுவதோ இளமை தனுஷ் மாதிரி). ஹீரோ தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு சின்ன கம்பெனியில் வேலை பார்க்கிறார். தினமும் காலை 8.30 மணிக்கு மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் 45E பேருந்துக்காக காத்திருப்பார். 45E பேருந்துக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. அந்தப் பேருந்து குருநானக் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி, ராணிமேரிக் கல்லூரி ஆகியவற்றைக் கடந்து மாநிலக்கல்லூரி வரை செல்லும். எட்டரை மணிக்கு பேருந்தில் வரும் பயணிகள் எந்த ஏஜ்குரூப்பில் இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சில நாட்களுக்கு சுவாரஸ்யமில்லாமல் பேருந்தில் சென்று கொண்டிருந்தவருக்கு திடீரென வாழ்க்கையில் பேருந்து வாயிலாக வசந்தம் தோன்றியது. அந்த வசந்தமும் அதே பேருந்து நிறுத்தத்தில் நம்ம ஹீரோவோடு பயணித்து எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரிக்கு சென்று வந்தது. சிம்ரனைப் போல பிடித்தால் ஒடிந்துவிடுமோ என்ற இடை. ரோஜா மலருக்கு சவால் விடும் நிறம். குயில் குரலையும் விட இனிதான குரல். சொல்லவும் வேணுமா? ஹீரோவுக்கு ஆட்டோமேட்டிக்காக காதல் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

சரியாக இன் செய்யாத கசங்கிய சட்டை, பிய்ந்துப் போன ஷூ என்று இருந்தவர் சில நாட்களில் ஆளே மாறிவிட்டார். ஏதோ கலெக்டர் உத்யோகத்துக்குப் போவது கணக்காக பீட்டர் இங்கிலாந்து சட்டை, உட்லேண்ட்ஸ் ஷூ, செண்ட் என்று அமர்க்களப்படுத்தத் தொடங்கினார். தினமும் காலையில் ஹீரோயினைப் பார்த்ததுமே வேண்டுமென்றே கையில் வைத்திருக்கும் தம்மை கீழே போட்டு மிதித்து விட்டு லைட்டாக ஒரு ரொமாண்டிக் ஸ்மைல் செய்வார் (இன்ஸ்பிரஸ் பண்ணுகிறாராம்). ஹீரோயினும் வேறுவழியில்லாமல் நம்மைப் பார்த்து ஒருத்தன் சிரித்துத் தொலைக்கிறானே என்று போனால் போகிறதென்று ஒரு ஸ்மைல் விடுவார். இதுபோதாதா ஹீரோவுக்கு கனவில் தொடர்ந்து டூயட் பாட ஆரம்பித்துவிட்டார்.

இப்படியாக மெல்லிய காதல்(?) அவர்களுக்குள் அரும்பிக் கொண்டிருந்தது. ஹீரோவைப் பார்த்துக் கொண்டே இருக்க வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹீரோயின் பேருந்தின் பின்வாசலுக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமரத் தொடங்கினார். அவரைப் போலவே நிறைய ஜூலியட்கள் அந்த ஏரியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தார்கள். வேறு வழியில்லாத ரோமியோக்கள் பேருந்து காலியாக இருந்தாலும் கூட புட்போர்டில் தொங்கியப் படியே பயணம் செய்யும் நிலை.

அன்று சூரியன் விரைவாக மலர்ந்த காலைப் பொழுது. அவசர அவசரமாக நம் ஹீரோ எழுந்து ஒரு வெள்ளைச் சட்டையை அயர்ன் செய்து, ஷூவுக்கு பாலிஸ் போட்டு பேக்கை எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு ஓடுகிறார். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! அன்று ஹீரோயின் ஹீரோவுக்கு மிகப்பிடித்தமான கறுப்புக் கலர் புடவையை சற்று லோ-ஹிப்பில் அணிந்து வந்திருந்தார். ஹீரோயினை சேலையில் பார்த்தது ஹீரோவுக்கு அதுவே முதல் முறை. Half அடித்தது போல ஒருமாதிரியான போதை ஹீரோவுக்கு வந்து தொலைத்தது.

தன் கடமையில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனின் வேதாளம் மாதிரி 45E பேருந்து வந்தது. ஹீரோயின் மேலே ஏறுகிறார். வழக்கமான சீட்டில் யாரோ அமர்ந்திருக்க சீட்டுக்கு முன் இருந்த கேப்பில் ஹீரோயின் நின்றுக் கொள்கிறார். வழக்கம்போல ஹீரோ புட்போர்டில் தொங்கியவாறே ஹீரோயினை லுக்விட்டு வருகிறார். ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் அரை அடி இடைவெளி கூட இல்லை. பேருந்திலோ அன்று செம கூட்டம். அல்லக்கைகள் ஹீரோவையும், ஹீரோயினையும் இணைத்து ஜோக்கடிக்க இருவரும் நாணத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து அவ்வப்போது சிரித்துக் கொள்கிறார்கள்.

பேருந்து சுமார் 40 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. வேளச்சேரியைப் பேருந்து தாண்டிய நிலையில் ஹீரோவுக்குப் பிடித்தது சனி. சன்னலில் தொங்கிக் கொண்டுவந்தவரின் கையை மேலே இருந்தவன் எவனோ லைட்டாக தட்டி விட ஒத்தைக் கையில் பயணிக்கிறார். காலைநேரத்து கசகசப்பு வியர்வையில் அந்தக் கையும் பிடியை விட்டு மெதுவாக நழுவுகிறது. மேலே இருந்தவன் கொஞ்சம் பேலன்ஸ் தவறி ஹீரோவின் மீது சாய... அய்யோ?

மேலே சாய்ந்தவனும், ஹீரோவும் நடுரோட்டில் விழுகிறார்கள். மல்லாந்து விழுந்த ஹீரோ அந்த நொடியில் ஹீரோயினின் கண்ணில் தெரிந்த கலவரத்தைப் பதிவு செய்துக் கொண்டே மண்டை உடைந்து மயக்க நிலைக்குப் போகிறார். மல்லாந்து விழுந்ததில் மண்டையில் கூரான கல் ஒன்று தேய்க்க லைட்டாக தலையை ஆட்டியதால் காயம் மின்னல் வடிவத்தில் வேறு விழுந்து தொலைத்து விட்டது. ஸ்டிச் செய்தும் இரத்தம் நிற்காத நிலை.

அடுத்த ஒருவாரத்துக்கு மண்டையில் கட்டுடன் சோகமாக வளராத தாடியை வருடிக்கொண்டு வருத்தமாக ஹீரோ காட்சியளித்தார். மண்டையில் அடிபட்டவுடன் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவுவதற்கு பதிலாக "அப்பன் ஆத்தா கஷ்டப்பட்டு படிக்கவெச்சா, இதுங்க பாட்டுக்கு புட்போர்டுல தொங்கி உசுரை விடுதுங்க" என்று திட்டித் தீர்த்தது கூட அவருக்கு கவலையில்லை. அடிபட்டு வீட்டுக்கு வந்தவுடன் அப்பா சுளுக்கெடுத்தது கூட அவருக்கு கவலை அளிக்கவில்லை. ஊசி போட வரும்போது வீரமாக ஆர்ம்ஸை காட்டும்போது பட்டக்ஸில் தான் போடுவேன் என்று நர்ஸ் கேவலப்படுத்தியது கூட அவருக்கு கவலை அளிக்கவில்லை. பிகர்கள் எதிரில் கீழே விழுந்துவிட்டோமே என்ற அதிமுக்கிய கவலை தான் அவரை வாட்டி எடுத்தது. எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு 45E பக்கம் போவோம் என்று மனதுக்குள் அழுது புலம்பினார்.

ஒரு வாரத்தில் நிலைமை சகஜமாகிவிட்டாலும் கூட மானம் போய்விட்டதே (ஹீரோ கவரிமான் ஜாதியாக்கும்) என்பதால் 45Eயை விட்டு விட்டு F51க்கு மாறிவிட்டார். புது பஸ், புது ஹீரோயின் என்று அவர் வாழ்க்கை திசை திரும்பிவிட்டது. ரோமியோ, ஜூலியட்டின் அமரத்துவ லெவலுக்கு வளரவேண்டிய அவர்களது காதல் பஸ் புட்போர்டினால் காமெடியாகி விட்டது.

ஹீரோ தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் 2007 ஜனவரிமாத அட்லஸ் வாலிபர். ஹீரோயின் எங்கிருக்கிறாரோ எப்படியிருக்கிறாரோ தெரியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின் ஹீரோயினை அவர் பார்த்தது கூட இல்லை. நினைவுகள் மட்டுமே மிச்சம் :-(

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஆர்குட்டில் "வருத்தப்படாத வாலிபர்களின்"!!??? அட்டகாசம்

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட்(?) பிடிக்கரானுங்கனு பாருங்க...








1. hi nice pictures ...u in tat saree.try wearin a white or Red saree u will look amazing..bye ...tc..do reply me

ஆமாம் இவர் பெரிய ஃபேஷன் டிசைனர்... அட்வைஸ் கொடுக்க வந்துட்டாரு... பேச்சை குறைங்கடா...

2. Hi. U look really awesome in the Photo and inside in the album in Saree. u look lik a tradional angel. i hav crossed ur profile once bfore, found intersting woman. can i b a part of ur friendship circle yar

டேய் நாயே இதுக்கு முன்னாடி முன்ன பின்ன ஏஞ்ஜல பாத்துருக்கியாடா? ஆமாம் அது என்ன ட்ரடிஷனல் எஞ்சல்? வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு உடறது...
அப்பறம் என்னடா நாயே ஃபிரெண்ட்ஷிப் சர்குலு, ஸ்கோயர்னு கதைய விட்டுட்டு இருக்க?

3. hi!!!!!!!!!this is mani 4rm chennai!!!!!!
int in bein ma friend then jus giv me a scrap dood!!!
well ab me!!!!I can sya that..........its upto ya !!!!B ma freind and know abt me dood!!!!!

மூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற டாக் உனக்கு கடலை வேண்டி இருக்கு...

4. hello girlie!!!!!how r things wid u???am an engg guy who's IGNORING BOOKS and trying 2 orkut wid u...how abt uuuuuu???

டேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்கனா... உனக்கு சங்குதாண்டி

5. Hi,how r u......ur so cute!!!!more if ur in my friends list!!!!will u!!!

அடாடா இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனசனுக்கு கூடாதப்பா...

6. U looking Mallika Sheravathi looking Imran aasmiCome let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட... அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

7. hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

8.Hi!if u retain this scrap I will understand that you are interested in meandif u delete this scrap, it means you are dreaming about me.Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்... அப்படியே மடக்கிட்டாராம்)

9. hi,the numerical value of L+O+V+E=54but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 10854+54= 108LOVE+LOVE= FRIENDSHIPso friendship is two times greater than love.............so will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by
2னு சொல்லுவ)

10.heyyy gal,Barcelona hav won the champions league finals!hurraaaayyyy!!!! come on lets be friends....

(மக்களே இதை பார்த்துட்டும் என்னய பொறுமையா இருக்க சொல்றீங்களா?)

11 .generally i never scrap to unknown ones but this pic just caught my eye...awesome pic gal.kalakita po.. lol

(இவரு நல்லவராம்.... ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்...மொன்ன நாயி...இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

12. hi niki.. well can i expect a scrap back from ya..well thought u are a person who can read and write... is it true.,... ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க என்னைக்குடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணாங்க?)

13.If u add me in ur list ill make ur life more pleasant and colorful...watsay?scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

14.Scrap- Eyy black beauty,how are you so fair???If you don't add me its very unfair...(இவருக்கு கவிதை வேற...)

15.Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips....Overall stunning effect...But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..ya i know u dont know me.. but who bothers??come on-add me as friend..am waiting 2 b ur fan...

(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா... ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா...)

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா...

Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

களை கட்டும் "தல" கச்சேரி

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க...

"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.." பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.


அதுக்கப்புறம் தல பலவாறு யோசிச்சி யோசிச்சி நம்ம பயலுவே என்னமோ பெரிய பெரிய பேரா சொல்லுறானுவே. நமக்கு தமிழே விட்டா வேறே பாசை எதுவும் தெரியாது. நமக்கு தெரிஞ்ச தமிழில்லாத ஒரு பாட்டு சிங் இன் த ரெயின்'தான். இப்போ வேறே என்ன பண்ணுறது, என் இனிய எதிரி வேறே ஒன்னோட கொரலு நல்லாயிருக்குன்னு வேறே சொல்லிட்டாப்பலே..! அதுக்காக இந்த சீசன்லே கச்சேரியும் பண்ணிரலாமின்னு சபா ஒன்னுலே வேறே துண்டை போட்டு இடத்தே வேறே பிடிச்சி குடுத்துருக்காரு. நமக்கு நல்லாதான் பாடவருமின்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இது ஒரு சத்தியச்சோதனையா ஆகிறுமே. நல்லா பாடலேன்னா மொதல்லா கல் கொண்டு எறியறப் பயலுவே நம்ம சங்கத்து சிங்ககள்தான், அதுவே நல்லா இருந்தா போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டுறது பத்தாதுன்னு வெள்ளைமாளிகையிலிருந்து ஐநா சபை வாசல் வரைக்கும் ஒட்டி அமர்க்களப்படுத்துவானுக.!

அடபாவி அடபாவி என்னை இப்பிடி தனியா புலம்ப வச்சிட்டானுவேலே!! சரி அவிங்ககிட்டே கேப்போம் ஏதாவது ஐடியா இருக்கான்னு??

தல தன் அறையிலிருந்து மின்னலென வெளிவருகிறார். அங்கு வெட்டி கணக்கு லெட்சரில் ஏதோ எழுதி கொண்டிருப்பதை பார்க்கிறார்.

"ஏலேய் கட்டரு, என்னா எழுதுறே?"

"தல, அ.வா'வுக்கு வரவேறப்புக்கு ஆன செலவே பற்று வைக்கிறேன்!"

"ஓ எம்பூட்டு"

"கொஞ்சம்தான் எவ்வளவு அதிலே பணமின்னு இருந்துச்சோ அதே விட 15000 ருபா கூட "

"அடபாவிகளா, சங்கத்து கணக்கிலே இருந்த பணத்தே தீர்த்ததும் பத்தமே அதிலே நஷ்ட கணக்கு வேறே எழுதுறீங்களா? அப்பிடியென்னா செலவு பண்ணீங்க??"

"சவுண்ட்பார்ட்டிக்கு ஒரு ஆளு உசரத்துக்கு ஸ்பீக்கரு கட்டினோம்."

"என்னாது? ஸ்பீக்கரு பெட்டியா? வெளியே ரெண்டு கொழா ரேடியாதானாய்யா கெடக்கு? அதிலே ஒன்னுலே கொண்டையே வேறே காணோம்? ஆனா உங்களே மாதிரி புரட்டு கதையை சொல்லுறதுக்கு அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா!"

"ஏன் தல உள்ளேதானே இருந்தீங்க? இப்போ எதுக்கு வெளியே வந்து சவுண்ட்?" ன்னு போர்வாள் எகிற

"கேட்டியா ஒரு கேள்வி.. ரைட்டுதான் அந்த கேள்வி! செவனேனு தானய்யா இருந்தேன். நான் எந்த வம்பு தும்புக்காவது போயிருக்கேனா..சொல்லு ? இது டிசம்பரு மாசம் நாமெல்லும் கச்சேரி வச்சிருவோமின்னு எனக்குள்ளே இருந்த சங்கீத ஆசையே தூண்டிவிட்டிங்க.. இப்போ அது அனலா தகிச்சு தீயா கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு."

சட்டென்னு ஏதோ ஞாபகம் வந்ததாய் தேவ்.. தலையே கோணலா திருப்பி விட்டத்தே வெறிக்கிறார்.

"ஆமா தல.. அந்த கச்சேரிலே விளம்பரம் செய்யினுமின்னா சென்னை கச்சேரியே அணுகவுமின்னு நோட்டிஸ் பண்ணினேன், ஆனா இப்போ அதிலே மா மன்னாரு சாப்ட்வேர் கம்பெனி வேறே போயிட்டிருக்கு!"

"ராஸ்கல்! சங்கம் டெக்னாலாஜிஸ்'க்கு போட்டி கம்பெனி ஆரம்பிக்கிறீயா நீயி?"

"அதெல்லாம் இல்லே தல... சங்கத்து டெக்னாலாஜிஸோட இணைந்தே இதுவும் நடக்கும்."

"என்னோமோ போ ஒன்னை மாதிரியே அதுவும் பிராடுத்தனம் பண்ணமே இருந்தா சரி!"

"தல ஒனக்கு இப்போ என்னா வேணும்?"ன்னு கோபமாய் தேவ் கேட்க

"எனக்கு குச்சி மிட்டாயி வேணும்! ஏலேய் அப்போயிருந்து என்னா சொல்லிக்கிட்டு இருக்கேன்னு தெரியலேயா? நான் கச்சேரிலே பாட்டு பாடணும் அதுக்கு நீங்கெல்லாம் ஒரு ஐடியா கொடுப்பீங்கன்னு வந்தேன்."

"தல ஒன்னோட குலப்பெருமையே சொல்லுற Sing the Rain பாட்டே தமிழிலிலே முழிபெயர்ந்து அதே அப்பிடியே பாடிருவோமா." ன்னு சிபி கேட்க, தல சட்டென்னு டென்சனாகி, சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க, இப்பிடியே முறை வச்சு முறைப்பு படலமா இருக்கிறப்போ தீடீரென்னு ஒரு கொரல், குடுத்தது கட்டரு..

"தல, தள நீங்க ரெண்டு பேரும் முறைச்சத யாராவது சினிமாகாரன் பார்த்திருந்தா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டி சாங் போட்டுறுப்பான்! பாட்டுக்குள்ளே ரெண்டு பேரும் சண்டை, வாக்குவாத போருன்னு கொண்டு வந்திருப்பாங்க"

"அயோக்கிய அப்ரெண்டிஸ்! இங்கே என்ன நடக்கிதுன்னு தெரியமே என்னா பேச்சு பேசுறே? இதுக்குதான் ஓவரா தெலுங்கு படம் பார்க்காதேன்னு சொல்லுறது, இது ஒரு பார்வை பரிமாற்ற போர்முறை, இதே நீ சீக்கிரமே கத்துக்குவே!"

"தல ஒன்னு பண்ணுவோமோ! நீங்க மேடையிலெ ஒட்கார்ந்து பாடுறமாதிரி ஆக்ட் கொடுங்க, நான் பின்னாடி இருந்து டேப்ரிக்கடருலே பாட்டு போட்டு விடுறேன்."ன்னு பாண்டி சொல்ல

"ஏலேய்! தெரியுமில்லெய் ஒன்னோட வேலை என்க்கிட்டே ஆவாதிடி, யாரவது அங்கிட்டு ஒரு பொண்ணு போச்சின்னா அது பின்னாடியே நீப்பாட்டுக்கு போயிட்டேனா நான் இங்கிட்டு ஒரெ பாட்டே திரும்ப திரும்ப பாடறமாதிரி அவிங்ககிட்டே மாட்டிக்கிட்டு ஒதை'தான் வாங்கணும்."

"தல ஒன்னு பண்ணலாம்! ஏதாவது ஒரு பாட்டு வாத்தியாருக்கிட்டே போயி செவனெனு பாட்டு கத்துக்கிட்டு வந்திரு, அப்பிடியே ஃபிரஷ்'ஆ நாலு பாட்டு பாடி அப்ளாஸ் வாங்கிரலாம்"

"யாருப்பா இது விவ்'ஆ., ம்ஹீம் நான் கும்பக்கோணத்துக்கு வழிக் கேட்டா கொட்டைப் பாக்கு ரூபாய்க்கு அஞ்சுன்னு ஏத்தமா பதிலே சொல்லுறே! ஏலேய் அப்ரெண்டிஸ்களா நீங்களாவது ஒரு ஐடியா சொல்லுங்க சாமீகளா"

"தல எம்.ஜீ.ஆரோட நாலு பாட்டு, சிவாஜியோட நாலு பாட்டு அதெய்யலாம் மேடையிலே பாடிரு, அதெல்லாம் இப்போ இருக்கிற ஆளுகளுக்கு சரியா தெரியாது, அதெல்லாம் ஒன்னோட பாட்டுன்னு நினைச்சிருவாங்க! என்னா சொல்லுறே" இது கட்டர்

"இது நல்ல ஐடியாதான், ஆனா சிலப்பேருக்கு அந்த பாட்டெல்லாம் தெரியும், ராயல் நீ என்ன சொல்லுறே??"

"தல, பழைய பாட்டுன்னா யாருக்குமே தெரியமே இருக்கிறது மகாலிங்கம்,தியாகராஜர் பாகவதர் பாட்டெல்லாம்தான். நீ அதேவே பாடிறலாம்!"

"ரைட்டேய், இதெல்லாம் மைண்ட்'லே வச்சிருக்கேன்.சரி நான் கச்சேரிக்கு போட்டுக்கிறதுக்கு டிரெஸ் வாங்கிட்டு வந்திய்யா ராயலு?"

"ம் இருக்கு தல! இந்த மஞ்சபையிலே சுருட்டி வைச்சிருக்கேன், இந்தா பாருங்க!"

"அடபாவி அப்ரெண்டிஸ், இது கலராய்யா? ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு போகுமிடா? ஏண்டா சட்டைன்னா மஞ்சகலரும்,உள்சட்டை கருஞ்செவப்பு கலரு, பச்சை கலருலே வேட்டியும்தான் கிடைச்சதா?"

"தல நீதானே சொன்னே? எதுவுமே ஒரு அட்ராக்டா செய்யினுமின்னு? அதுதான் போடுற டிரெஸிலே அட்ராக்டிவான கலரா தேடி கண்டுப்பிடிச்சேன்.!"

"சரி அதெல்லாம் ஓகே! யாராவது ஐடியா சொல்லுங்கய்யா?? எப்பிடி மேடையிலே பாடுறதுன்னு??"

"தல மேடையிலே ஏறி ஒனக்குன்னு இருக்கிற இடத்திலே உட்கார்ந்து, மைக்கே எடுத்து வாயை திறந்து பாடணும்!!"

"டேய் ராஸ்கல், ஒனக்கு வரவர ரொம்ப ஏத்தமா போச்சுலே பாண்டி! நான் என்ன கேட்டா நீ என்ன பதிலே சொல்லுறே? சுருதி சுத்தமா எப்பிடிய்யா பாடுறது? யாராவது சொல்லித் தொலைங்கய்யா சாமிகளா... சும்மா இருக்கிறவனே சொறிச்சு விட்டு வேடிக்கை பார்க்கிறதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சுலே???"

"தல நான் ஒரு ஐடியா சொல்லுறேன்"ன்னு சிபி முன்னுக்கு வருக்கிறார்.

"ம் சொல்லு என்னருமை தளபதியே?"

"தல ஒரு வரியே நாலு அஞ்சு தடவை சும்மா திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இரு, அது போதும், அப்பிடியே கேட்கிறவங்களுக்கு ஒரு கச்சேரி கேட்கிற எபக்ட் வந்திரும். இதேமாதிரி செஞ்சேன்னு வை, ஒரு பாட்டே பாடி முடிக்க 15லிருந்து 20 நிமிசம் ஆகிறும், அப்பிடியே நாலுப்பாட்டுக்கு ரெண்டு மணிநேரமா இழுந்திரலாம். என்னா சொல்லுறே??"

"அதெல்லாம் சரிதான்! இப்போ என்ன பாட்டே பாடுறது? எனக்கு நல்ல குரல்வளம் இருக்கான்னு தெரியலே?"

"தல நீ பார்க்கதான் பென்சில்லே கோடு வரைஞ்சமாதிரி சரிரம்! ஆனா நீ பாடினா அது கட்டை சாரீரம்!"

"என்னாமோ தள! ஒன்னோட பேச்சே மலை மாதிரி நம்புறேன். இந்த ராகம்,தாளம்,பல்லவியோட பாடணுமே? அதுக்கு என்னா பண்ணுறது?"

"இப்பிடி பண்ணலாம்! கோவைக்கு ஒன்னோட ஹெலிக்காப்டருலே வந்துரு! நீயும் நானும் ராகம்,தாளம்,பல்லவிக்கு போயி ஒவ்வோரு ஷோ'வா பார்த்துட்டு படத்திலே இருக்குற நல்ல பாட்டெல்லாம் கச்சேரிலே வந்து சேர்த்து வச்சு பாடிரு! ஒவ்வொரு பாட்டுக்கு முன்னாடியும் ஒரு போர்டு'லே இது ராகமிலே பார்த்தது, தாளத்திலே பார்த்தின்னு சொல்லிறலாம்!!!"

"ஆனா ஒன்னே ஒன்னு தெரிஞ்சு போச்சு! உங்களளே எனக்கு ஒன்னத்துக்கும் சல்லிக்காசு'க்கு பிரயோசனமில்லன்னு நல்லவே தெரிஞ்சு போய்யா சாமிகளா??? போங்க போய் எனக்கு எப்பிடி ஆப்பு வைக்கலாமின்னு அமெரிக்காகாரன் அடுத்த நாட்டு மேலே குண்டு போடுறதுக்கு யோசிக்கிறமாதிரி பெரிய விஞ்ஞானிகளாட்டம் திங் பண்ணுங்க..."

தல இம்மாதிரி மனசொடிந்து பேசும் பேச்சைக் கேட்டு சங்கத்து சிங்கம்கள் அனைவரும் கவலையுறுகின்றனர்.

"தல நாமே ஒன்னு பண்ணலாம்! நமக்குதானே தெரியலே? வேறே யாராவது அதேபத்தி தெரிஞ்சவங்ககிட்டே கேட்டுப்பார்போமா?"

"ஆங்..பரவாயில்லேயே விவ், இம்பூட்டு நேரமா அமைதியா இருந்தாலும் நல்ல வாசகமா அதுவும் திருவாசகமாதான் சொல்லிருக்கே! இப்போதாய்யா எனக்கு நல்ல ஐடியா'வே வருது! நம்ம சங்கத்து தீரா தலைவி(வலி)யே காண்டக்ட் பண்ணுங்க.. இல்லேன்னோ அந்த விக்கிபசங்களே உசுப்பி விடுங்கய்யா?? அவங்க வந்து என்ன கர்ஜிக்கிறாங்கன்னு பார்ப்போம்... எனக்கு எப்பிடியாவது கச்சேரி பண்ணியே ஆவணும். ஐ வாண்ட் டூ இட் நவ்...

"தல இன்னோன்னு பண்ணலாம்? எனக்கு தெரிஞ்சு பெரிய பெரிய தலைங்கயெல்லாம் பாட்டு பாடி குழந்தைகளை கவர் பண்ணுவாங்க.. நீயும் குழந்தை குழந்தையா இருந்தாதான் பிடிக்குமின்னு சொல்லிறுக்கே?? அதுனாலே மொதல்லே குழந்தைகளை கவர் பண்ணு! அதுக்கப்புறம் கைப்பு அங்கிள்! கைப்பு அங்கிள்! உன் பின்னாடியே எல்லாரும் வந்திருவாங்க.."

"வேணாம் கட்டரு! நானெல்லாம் ஏற்கெனவே பெரிய தலையா ஆகிட்டேன். எனக்கு தெரியவேண்டியது ராகம்,தாளம்,பல்லவி'தான்... பார்ப்போம் அந்த விக்கிபசங்க எம்பூட்டு நாளைக்குள்ளே சொல்லிதாரங்கன்னு?? அவங்கதான் என்னா சந்தேகம் கேட்டாலும் தீர்ந்து வைக்கப்பாலேமே?? எனக்கு இப்போ மீஜீக்'லே பேசிக் நாலெச் வேணும்??"

தலயோட இந்த அறிவிப்பை கேட்டு சங்கத்து சிங்கக்கள் எல்லாரும் அமைதியாகிறார்கள். விக்கிப்பசங்கதான் பாவம் நம்ம தல கேட்கிறகேள்விக்கெல்லாம் எப்பிடிதான் சமாளிக்க போறாங்களா..!! அய்யோ.. அய்யோ!!!!

சங்கம் ஸ்டார் நைட்

தல மூக்குலே மூணு அங்குல நீளத்துக்கு வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகாரன் விளம்பரத்துக்குக் கொடுத்த பேண்டேஜ் போட்டு உக்காந்து இருக்க.. சுத்திலும் சங்கத்துச் செல்லங்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

பாண்டி பக்காவா ஜீன்ஸ் போட்டு ரேபான் கிளாஸ் அப்புறம் டிக் மார்க் போட்ட டீ ஷர்ட் எல்லாம் போட்டுகிட்டு சங்கத்துக்குள்ளே நுழைந்தான்.

சங்கத்து வாசல்லே சீசனுக்கு ஏத்தாப்புல்ல ஸ்டார் கட்டித் தொங்கவிட்டுகிட்டு இருந்த வெட்டி டக்கென்னு பாண்டியப் பார்த்து ஷாக் ஆகி நின்னான். பாண்டி கையிலிருந்த கௌபாய் ஹேட் எடுத்து படு ஸ்டைலா சுழற்றி தலையில் மாட்டவும் ராயல்,பாண்டி புதுசா எதோ கரகம் ஆடப் போறான்னு அடுத்தப் பதிவுப் போட கையிலே நோட் பேட் எல்லாம் எடுத்து வச்சிகிட்டான்.

"ஹாய் கைஸ்.. என்னது இது நியூ இயர் ரவுண்ட் த கார்னர்.. இப்படி சோகமா உக்காந்து சுவத்தைப் பாத்துகிட்டு இருக்கீங்க...பாண்டி பாதி இங்கிலீஸ்ல்லயும் மீதி எத்திராஜ் காலேஜ் பொண்ணுங்கப் பேசும் தமிழிலும் கேட்க..

சங்கத்துச் செல்லங்கள்.. லைட்டாக் கண்கலங்கி விட்டனர். ரேபான் கிளாஸைத் தல கைப்புள்ளயின் மூக்குக்கு நேராச் சுழட்டி மீண்டும் மாட்டிய பாண்டி
"ஆர் மேன் இது பெக்கர் பெல்லோ தல சீட்லே உக்காந்து இருக்கான்..."அப்படின்னு ஒரு நக்கல் கேள்வி கேட்க....

தலயின் கோபம் உச்சிக்குச் சென்று மூக்கு வழியாகக் கொப்பளித்த கொப்பளிப்பில் பேண்டேஜ் சங்கத்துக் கூரையைப் பிச்சிகிட்டு எங்கியோ போய் விழுந்துச்சு...

"ஏலேஏஏஏஏஏஏஏய் பாண்டி.... நானாடா பெக்கர் பாய்... படுக்க பாய் இல்லன்னு நீ வந்தப்ப... எதிர்த்த வீட்டு ஆயாகிட்ட எவர்சில்வர் கரண்டியால அடி வாங்கிட்டு ஆயா படுத்திருந்தப் பாயை உருவுகிட்டு ஓடி வந்து கொடுத்த இந்தக் கைப்புள்ளயை உனக்குத் தெரியல்லயா....
பேகி பேண்ட் போட்டாத் தான் நாலு பிகராவது என்னையப் பாக்கும் தலன்னு நீ பிலீங் விட்டப்போ.. நம்ம தெரு மளிகைக் கடை சாக்குத் துணி களவாண்டு உனக்குப் பேகி போட்டு அழகு பார்த்த இந்த அண்ணன் கைப்புள்ளய உனக்குத் தெரியல்லயா?"

"ஏய் நிப்பாட்டு.. இப்படி வாய்ஸ் மாடுலேஷன் பண்ணி உன் பாடி லேங்குவஜைக் கண்ட படி யூஸ் பண்ணி இந்த யூத்தை இன்னும் எத்தனை நாளைக்கு கன்ப்யூஸ் பண்ண முடியுமின்னு நினைக்குற கைப்புள்ள?"

சொல்லி அடிப்பார்... சொல்லி சொல்லி அடிப்பார்... அப்படின்னு சங்கக் கூரை எல்லாம் அதிர பேக் கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க...

ரிபோக் ஷூ, சவுண்ட் கேக்க.. கையிலே 5 பவுன் பிரெஸ்லட் டாலடிக்க... லீ வைஸ் ஜீன் தோய்ச்சு வருச கணக்கான எபெக்ட் கொடுக்க...வலை பனியனும் அதுக்கு மேல புல் ஓவரும் போட்டுகிட்டு செம ஸ்டைலா கைப்புள்ளயை நோக்கி அந்த ஆள் வந்தான்.

வந்து நின்னு கைப்பு மூக்க ஒரு உரசு உரச... சட்டுன்னு புடிச்ச தீயை அப்படியே நாக்குல்ல வச்சு....

தீ டா.... என்னப் பார்த்தா ஊருக்கே பீதீடா...ன்னு சொல்ல.... பாண்டி பலமாக் கையத் தட்டுகிறான்.

பின்னாடியே ராயலும் வெட்டியும் சேர்ந்து விசிலடிச்சு பே'தனமா சவுண்டே கிளப்புறாங்க....

ண்ணா சூப்பர்ங்கண்ணா... அப்படின்னு கூரைக் கேப்பல்லருந்து கட்டத்துரை அன்ட் பார்த்தி குரூப் கொரலு விடுது...

மூக்கு மீண்டும் காயப்பட்ட நிலையில் கைப்பு கோவமாய் பாண்டி, வெட்டி, ராயலை முறைக்க... மூவரும் புது ஆள் பின்னாடி பதுங்குறாங்க...

"ஆமா நீ யார்?.. ஓனக்கு ஏன் இந்தக் கொலைவெறி.. வேணும்ன்னா வந்து நாலு அப்பு அப்பிட்டுப் போயிகிட்டே இரு..அத விட்டுபுட்டு மூக்குல்ல முக்காடு போடற மாதிரி சின்னப்பிள்ள தனமா விளையாட்டு எல்லாம் வேணாம்...".

"நான் யார்ங்கறது அப்புறம் இருக்கட்டும்... இக்கடச் சூடு.... விஸ்க்க்...விஸ்க்க்ன்னு அந்த ஆள் கையைச் சுழற்ற... புது கார்கோ பேண்டுகளும்.. லேட்டஸ்ட் பேஷன் ஆடை ஆபரணஙக்ளும் சங்கத்து மக்கள் மீது வந்து சேருகிறது..."

"ஆத்தாடி... சரியான பொரளி வித்தக்காரனா இருப்பான் போலிருக்கு.... உசார் ஆயிரணும்..." "எங்களுக்கும் இந்த மாதிரி வித்தை எல்லாம் தெரியும்.. நாங்களும் காட்டுவோம் இல்ல..." என்று கண்ணை மூடி ம்ம்ம்ம்னு மந்திரம் ஜெபிக்கிறார் கைப்பு...

கண்ணைத் திறந்துப் பார்த்தால்... எதிரே அந்த ஆள் அப்பிடியே சிரிச்சிகிட்டு நிக்குறான்.. சங்கத்துச் சிங்கங்களில் புதிதாய் புலிக்குட்டியும் இணைந்திருந்தான்.. அவனும் அதே கார்கோ ஸ்டைல் டிரேசில்..

"என்னது நம்ம மந்திரம் வேலைச் செய்யல்ல போலிருக்கேன்னு" கைப்புள்ள தனக்குள் கலங்கிக் கொண்டிருக்க....

"என்ன தல வித்தக் காட்டுறேன்னுச் சொல்லிட்டு வித் அவுட்ல்லே நிக்குறீங்கன்னு" ராயல் பழைய பாசத்தில் பதற...

"ஆகா... கழட்டிட்டான்ய்யா... கழட்டிட்டான்ய்யா... வித்த வில்லங்கமா ஒர்க் அவுட் ஆகி வித் அவுட் ஆகிறுச்சேன்னு தல கதற.." பாண்டி பழைய பிலீங்க்கில் தன் தொப்பியைத் தானம் கொடுத்து தலயின் மானம் காக்கிறான்.

"எங்கேடா என் தளபதி..? போர் வாள்...?அப்புறம் என் பாசக் கண்மணி விவசாயி...? எங்கேடாப் போயீட்டீங்க...?? ஓங்க தலயின் அவல நிலையை தட்டிக் கேக்க கிளம்பி வாங்கப்பா"

"ஏய் கைப்பு...! மூடு உன் மவுத் பைப்பு...." டக்கென்ன்று அந்த ஆள் கையை நீட்ட கைப்பு வாயிலும் பிலாஸ்டர் ஓட்டுகிறது...

"தளபதி..... அவர் தசாவதாரம் படத்துல்ல கமலுக்கு இன்னும் அஞ்சு ஆறு கெட்டப் போட ஐடியா கொடுக்க அமெரிக்காப் போறதா ஏர்போர்ட்ல்ல வெயிட்டிங்கல்ல இருக்கார்... கமலை எப்படியாவது ரஜினி வேஷத்துல்ல நடிக்க வச்சி கலாய்ச்சுட்டுத் தான் தாய் நாடு திரும்புவேன்னு பூமி ஆத்தா மேல சவுண்டு விட்டு சரியா நயன் 10க்கு சத்தியம் பண்ணியிருக்கார்"

"போர்வாள் மொட்டைப் போட்ட ரஜினி படத்தை மட்டும் பார்த்தே விசில் அடிச்சு வாய் வலிச்சுப் போய் கச்சேரி கிரவுண்ட்ல்ல உக்காந்து இருக்கார்.. அவரும் வர மாட்டார்..."

"விவசாயி... ஆகா.. ஆகா.. அவர் வருவார்.. ஆனா வர மாட்டார்.. வந்தாலும் எதுவும் செய்ய மாட்டார்.. செஞ்சாலும் சொல்ல மாட்டார்.. சொன்னாலும் உனக்குப் புரியாது... ஏன்னா அவர் இப்போ லீவுல்ல... ஹாங்காக் போய் ஹாலிடேவை ஜாலி டேவாக் கொண்டாடிகிட்டு இருக்கார்..."

பிலாஸ்டரை பிச்சுகிட்டு பிளிறினார் தல...

"ஆய்யோகோ என்னடா கொடுமை இது.. ஒரு எட்டு பத்து மாசமா உங்களுக்காக எல்லாம் பக்கம் பக்கமா பிளாக் போட்டு.. கண்டபடி படமெல்லாம் புடிச்சு.. காடு மேடுன்னு பாக்காம... எந்தப் பாஷயா இருந்தாலும் புரிஞ்சமாதிரியே நடிச்சு.... உங்களுக்காக... உங்க நலம் மட்டுமே என் நலன்... என வாழ்ந்த வாழும் உங்கள் நண்பன்.. உங்கள் அன்பன் உங்க தல கைப்புள்ளய இப்படி பாடா படுத்துறாங்களே என்னிய காப்பாத்த ஆஆஆருமே இல்லயா.......... நான் இப்படியே நோபடியாக நொந்துத் தான் போகணுமாஆஆஆஆஆ...."

"ஏஏஏய் என்ன மேன் ஓவராப் பேசுற?"

கைப்பு டக்குன்னு ஆப் ஆகிறார்.

"என்னது இவங்களுக்காக உழைச்சியா... போன வருசம் இவிங்களுக்குப் புது வருசத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்த?"

"குச்சி முட்டாயும் குருவி உருண்டையும்" மெல்ல முணுமுணுக்கிறார்.

"ஆமாங்க.. அதுல்ல கூட ஆப்பிரிக்கால்ல இருக்க அவரு கேர்ள் பிரண்டுக்கும் அந்தப் பொண்ணு அம்மாவுக்கும் கொடுக்கணுமின்னு சென்டிமென்டாப் பேசி எனக்குக் கொடுத்ததைத் திருப்பி வாங்கிட்டார்ங்க"பாண்டி கோபத்தில் கொதிக்க..

"அது மட்டுமா... விவசாயிக்குப் போன புது வருசத்துக்கு கொடுத்த நாலு கடலையையும் கெஞ்சிக் கதறி திருப்பி வாங்கியாட்டியாமே.. போர்வாள்க்கு கொடுத்த தேன் மிட்டாயை கூட அவர் அசந்த நேரம் அடிச்சிட்டுப் போய் பாண்டி பிகருக்குக் கொடுத்து சைட்ல்ல டிராக் ஓட்டியிருக்கே நீ.. உன்னியப் பத்தி ஊருக்குள்ளே... ஊருக்கு வெளியே எல்லாம் விசாரிச்சிட்டுத் தான் வந்துருக்கேன் "
புது ஆள் தன் லேப் டாப்ல்ல இருந்து புள்ளி விவரஙக்ளை எடுத்துச் சொல்ல.. கைப்பு மெல்ல அம்ம்ம்மா சவுண்ட் கொடுக்குறார்.

"ஒரு குரூப்ப்பாத் தான் கிளம்பியிருக்கான்வ போல... இனி குனிய வச்சு கும்மி அடிச்சு குத்த வச்சு குல தெயவத்துக்கு நம்மளைப் பொங்கிப் போட்டுட்டுத் தான் விடுவாயங்கப் போலிருக்கே"

"அது போன வருசமின்னு சொல்லி நீ தப்பிக்க நினைப்பே... அதுனாலக் கேக்குறேன் இந்த வருசம்.. இந்தப் புள்ளங்களுக்கு என்னத் தர்ற போறதா உன் திட்டம்"

"அது வந்து கேப்பக் கஞ்சியும் குழாபுட்டும்.." கைப்பு சொல்லி முடிக்கவும்...

"கைப்பு இந்த பச்சிளம் பாலகன் பாண்டி முகத்தைப் பார்... பீர் விட்டு கழுவி அழகு பாக்க வேண்டிய மொகத்துக்கு குழாபுட்டுன்னு குண்டு போடுறீயே.. அவ மனசு என்ன பாடு படும்..

இங்கிட்டு பார்.. ரம்மியமா இருக்க இந்த ராயல் முகத்தைப் பார்... ரம் கொடுத்து கம் சொல்ல வேண்டிய இந்த புள்ளக்கு கேப்பக் கஞ்சியா.. என்ன கொடுமை இது சரவணா..."

"பச்சிளம் பாலகனா.. பாண்டியா.. ரம்மியமான புள்ள ராயலா.. விட்டா தவழும் தம்பி தளபதி.. மழலை மொட்டு போர்வாள்.. தத்தும் மழலை விவசாயி..ன்னு வில்லங்கமாவே எபெக்ட் கொடுத்தேப் பேசுறானே அய்யோ நான் என்னப் பண்ணுவேன்.. இருக்க ஒரு ட்ரை சைக்கிளுக்கும் லாக் போட்டுட்டு போயிருவான் போலிருக்கே.... பரிதாபமாக கைப்பு கதற...

பதிலுக்கு சங்கத்தினர் கோபப் பார்வை பொங்க அனலாய் சவுண்டை அள்ளிவிட...
என்ன இம்புட்டு சவுண்டு'ன்னு கைப்பு மிரள...

"லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலமா இங்கே நடக்குறது மொத்தத்ததையும் லைவ் ரிலேவா பிசாபர்கர் டெலிவிசன் உலகம் முழுக்க காட்டிட்டு இருக்கு கைப்பு"
அதுக்காக நம்ம உதய் வேற டால்பி டிஜிட்டல் சவுண்ட் ஏற்பாடு பண்ணி கொடுத்த விசயம் தனிக் கதை...

"ஏன்டா எடுபட்ட பயலுவேளா வித் அவுட்ல்ல என்னிய வீடியோ எடுத்து ஓலகம் முழுக்கவாடா காட்டுறீங்க விளங்குமாடா? ஓனக்கு நான் என்னடா துரோகம் பண்ணேன்.. நான் பாட்டுக்கு ஒரு ரூட் போட்டு அதுல்ல குதூகாலமாத் தானேப் போயிகிட்டு இருந்தேன் இப்படி வீதிக்கு இழுத்து விட்டு என் கதைக்கு இன்டர்வெல் விடுறியே நீ யார் ராசா.....நீ யார் அய்யா... சொல்லிருப்பு.. முடியல்ல மூக்கு முட்டுது.. கண்ணு கட்டுது...

பயங்கர சிரிப்பு.. பின்னால் லைட்டைப் பாண்டி ஆப் பண்ணி ஆன் பண்ணி எபெக்ட் கொடுக்க..

விஸ்க் விஸ்க்ன்னு உதய் வால்யூம் ஏத்தி பில் டப்பு கொடுக்க...

"நேனேரா... உர்ரேஏஏஏஏஎ ஸ்டீவ் வாக்கு... இப்புடு தெலுசா... ஸ்வைங் இன் த ரெயின் பாட்டுலு பாடிலு நா லைப்ப்ல்லு கில்லி ப்ளே ச்சேசுன்ன வாடு நீயே ரா.... உன்னியே ரேப் சூடுதானுவுறா...

"ரேப்பா அது வேறய்யா.. அய்யா வேணாம்.. ஆம்பளை ஆம்பளைய டிச் பண்ணலாம் கண்டபடி டச் பண்ண்பிடாது தப்பு" கைப்பு அழ ஆரம்பிக்க..

"ச்சீ நாஸ்ட்டி பெல்லோ.. ரேப்ன்னா தெலுங்குல்ல நாளைக்குன்னு அர்த்தம்.. உன்ன நாளைக்குப் பார்த்துக்குறேன்னு சொன்னேன் மேன்.."

இப்போதைக்கு என் பேரை மட்டும் சொல்லுறேன் வாயைப் பொளக்காமக் கேளூ


பா....லா.....PUNCH பாலா.... என் ட்ரெஸ்க்கு நான் போட மாட்டேன் உஜாலா....

அவனாஆஆ நீயி...... கைப்பு அலற.... சங்கத்தில் கரண்ட் கட் ஆகிறது..!


அப்படியே எல்லோர் பார்வையும் வெட்டிப்பயல் இருக்கும் பக்கம் திரும்புகிறது..

பின்னே டைட்டில் சங்கம் நட்சத்திர இரவுன்னு வச்சாச்சு.. அதுக்கு காரணம் வேண்டாமா..

அதான் சங்கம்... பாலாஜி...(இந்த வார ஸ்டார்) இரவுன்னு முடிச்சாசு...

புத்தம் புதுசாய்....

"ஆப்புகள் ஆயிரம் கோடி வாங்கி... வேட்டிகளை வெளிநாடுகள் என்றும் பாராமல் பறக்க விட்டு... குப்புற விழுந்து கொமாட்டுல்ல கும்மாங்குத்து வாங்கி... இடுப்பிலே இடியை விட பலமான மிதிகளை வாங்கி...மூஞ்சி மொகரையில் புயல் வேகத்தில் லெப்ட் ரைட் என அறை வாங்கி அஞ்சாறு ஊருக்கு கேட்கிறமாதிரி மைக் இல்லாமலே அலறல் விட்டு... ஓடம்புல்ல ஒரு லட்சம இடத்துல்ல டிசைன் டிசைனா அடியை வாங்கி...டப்பா டான்ஸ் ஆடுற அளவுக்கு அல்லோலப்பட்டு.. டன் கணக்கல்ல டின் கட்டப்பட்டு... அங்கிட்டு இங்கிட்டு என எங்கிட்டும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கெத்து குலையாம எங்க தல கட்டுன வீர விவசாயப் பூமி எங்க சங்கம்...

அதே பிளாக்ல பீடாப் போட்டோம்.. பதிவுலே வெத்தலப் போட்டோம்... அப்படின்னு விளக்கம் சொன்னா.. விட்டுருவோமாய்யா.. வீதிக்கு வீதி விளம்பரப் படுத்தி வித்தைக் காட்டி எங்க தல பவர் என்னன்னு ப்ருவ் பண்ண மாட்டோம் நாங்க..."

"ஏலேய், போர்வாளு நிப்பாட்டு! என்ன உன்னோட பிரச்சினை எதுக்கு இப்போ சந்தையிலே வித்தை காட்டுறவன் மாதிரி சவுண்ட் விட்டுக்கிருக்கே...??"

"தல! சங்கம் பீட்டா, பாட்டா'ன்னு என்னோமோ ஆகிப்போச்சு! அதுதான் இப்பிடி சவுண்ட் விட்டேன்!"

"என்னாலே சொல்லுறே? பீட்டா'வா?"

"ஆமா நம்மளை கூடி கும்மியடிக்கிறே கோஷ்டிகளுக்கு பூராப் பேத்துக்கும் வெத்தலை பாக்கு வைச்சு கூப்பிட்டு பீட்டாவுக்கு மாத்த சொல்லிறாங்க!"

"சரிதான் இழுந்து வைச்சு கலகம் பண்ணுறாய்ங்களா??? சரி விட்டுதள்ளு! தானமா கிடைச்ச மாட்டே எதுக்கு பல்லை பிடிச்சு பார்க்கணும்???"

"சரி தல! நானு என்னோட அறிவிப்பை தொடர்ந்துக்கிறேன்..!"



மக்களே,

மேலே இருக்கிறமாதிரி அட்டவணை போட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கும் போது நமக்குன்னு ஒரு ரிலாக்ஸ் செஞ்சுக்கிற இடமா இருந்த சங்கம் இப்போ சின்ன பிரச்சினைலே இருக்கு.

ஆமாம் நம் தலையின் இனிய எதிரிகள் கட்டதுரையும், பார்த்திபனும் இணைந்து நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை கந்தகோலம் ஆக்கிவிட்டனர். அதுக்கா நாம் அசரப்போகிறோம்...

இந்தா மறுபடியும் எங்க சிங்கத்தைச் சீவி சிங்காரிச்சி கூட்டிட்டு வந்துருக்கோம்ய்யா.. கூடவே தலக்கு சப்போர்ட்டா அண்ணன் பஞ்ச் பாலாவும் வந்து இருக்காகாக...



விரைவில் சங்கம் முற்றிலும் புதுப் பொலிவுடன் புத்தம் புதுசாய் மலர இருக்கிறது!!!

லோக்கல் ஆப்பு ரிஜக்டட்.. கலக்கல் ஆப்பு அக்சப்ட்ட...

அப்புறம் என்ன தாரைத் தப்பட்டைகள் எல்லாம் கிழிந்துத் தொங்க வேண்டாமா.. கிளப்புங்கள் பீதியை...

வழக்கம்போல் உங்களை சிரிக்கவைக்க இதோ கிளம்பிட்டோம்... மக்கா கிளம்பிட்டோம்மய்யா.....